Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய், அஜித்தை முந்திய கவின்.. டாடா பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன?

விஜய், அஜித்தை முந்திய கவின்.. டாடா பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன?

- Advertisement -

கடந்த ஒன்பதாம் தேதி வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சிறிய பட்ஜெட் படத்தில் நடிகர் கவின் நடித்து ரெட் ஜெய்ன்ஸ் நிறுவனத்தால் இந்த படம் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்தது. இதன் காரணமாக படத்தின் முதல் வார இறுதி வசூல் தமிழக முழுவதும் 5 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த வார இறுதியில் அதிக வசூல் பெற்ற படத்தில் டாடா முதலிடத்தில் உள்ளது.

இதை போன்று கடந்த நான்கு வாரங்களாக முதலிடத்தில் இருந்த வாரிசு திரைப்படம் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வார இறுதியில் வாரிசு திரைப்படம் 2 கோடி ரூபாய் வசூல் பெற்றிருக்கிறது. இதன் மூலம் மொத்த வசூல் தமிழகத்தில் 144 கோடி பெற்றிருக்கிறது. இதேபோன்று மூன்றாவது இடத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் திரைப்படம் வார இறுதியில் ஒன்றரை கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது. மொத்தமாக இந்த படம் தமிழகத்தில் 5 கோடி 50 லட்சம் ரூபாய் வசூலை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இதேபோன்று நடிகர் அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படம் வார இறுதியில் 80 லட்சம் ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது. மொத்தமாக இந்த படம் தமிழகத்தில் 120 கோடி ரூபாயை நெருங்குகிறது. பாலிவுட் திரைப்படம் ஆன பதான் கடந்த வார இறுதியில் 70 லட்சம் ரூபாயை தமிழகத்தில் பெற்றிருக்கிறது. மொத்தமாக இந்த படம் 21 கோடியே 90 லட்சம் ரூபாயை தமிழகத்தில் பெற்று இருக்கிறது.

- Advertisement -

ஆறாவது இடத்தில் பாபி சிம்ஹா நடித்த வசந்த முல்லை திரைப்படம் இடம் பிடித்துள்ளது .இது தமிழகத்தில் வெறும் 60 லட்சம் ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது. முதலில் விஜய் , அஜித் படங்கள் பல வாரங்கள் ஓடி ஆன்லைனில் படம் ரிலீஸ் ஆகி இருந்தாலும் இன்னும் வசூல் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி டாடா திரைப்படம் தற்போது வார இறுதியில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் கவினுக்கு நல்ல எதிர்காலம் காத்திருப்பதாக திரைத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

Most Popular