நடிகர் விஜய் தன்னுடைய 67வது படமான லியோவின் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படம் காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்த படத்தின் வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் காஷ்மீருக்கு சென்ற படக்குழுவினருக்கு பெரும் சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதாவது இது காஷ்மீரில் கோடை காலமாகும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக காஷ்மீரில் தற்போது கடும் குளிரில் நிலவி வருகிறது. சில பகுதிகளில் இந்த நேரத்தில் இப்படி குளிர் நிலவியது இல்லை என்று அப்பகுதி மக்களே ஆச்சரியமாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் லியோ படக்குழு காஷ்மீரில் சிக்கி உள்ளது. இரவு நேரங்களில் மைனஸ் 10 டிகிரி வரை குளிர் செல்வதால் படக்குழுவினரால் படப்பிடிப்பு நடத்த முடிய வில்லை.
குளிர் தாங்க முடியாமல் நடிகை திரிஷா சென்னை வந்து சிகிச்சை எடுத்துவிட்டு மீண்டும் காஷ்மீர் திரும்பியதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் படக்குழுவினரின் பாதுகாப்பை கருதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளார். அதன்படி படத்தில் நடைபெறும் அனைத்து இரவு காட்சிகளையும் பகலில் எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார். அதன்படி பழத்தின் சூட்டிங்கை காலை 9 மணிக்கு தொடங்க அவர் முடிவு செய்துள்ளார். எனினும் கடும் குளிர் காரணமாக பல்வேறு நடிகர், நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தாமதமாகவே வருகிறார்கள்.
ஆனால் படத்தின் நாயகன் ஆன விஜய் மட்டும் எட்டு மணிக்கே படபிடிப்பு தளத்திற்கு வந்து மற்றவர்களுக்காக காத்திருக்கிறார். இதனை பார்த்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அசந்து போய்விட்டாராம். கடுங்குளிர் காரணமாக தாமே தாமதமாக வரும் நிலையில் விஜய் ஒரு மணி நேரம் முன்பே படபிடிப்பு த்தளத்திற்கு வருவது மற்றவர்களிடையே ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. இதை அனைத்தையும் விஜய் தனது ரசிகர்களுக்காகவே செய்து வருகிறார். ஏற்கனவே 48 வயதில் சுமார் ஒன்றரை நிமிடம் ஒரே சாட்டில் டான்ஸ் ஆடிய விஜய், தற்போது வெயில் குளிரை காரணம் காட்டாமல் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.