நடிகர் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் பறிகொடுத்தார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். லைக்கா நிறுவனம் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனை நீக்கியது. இது அவருக்கு பெரும் மன உளைச்சலை தந்துள்ளது. இந்நிலையில் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக புதிய கதை ஒன்றை விக்னேஷ் சிவன் ரெடி செய்துள்ளார்.
விக்னேஷ் சிவனுடைய படம் என்றால் அதில் நிச்சயம் கலக்கல் ஆன காமெடி இருக்கும். இதனால் தற்போது காமெடி கலந்த ஆக்ஷன் கதையை எடுக்க விக்னேஷ் சிவன் முடிவெடுத்துள்ளார். இதற்காக அவர் இரண்டு நடிகர்களுடன் பேசியுள்ளார். ஒன்று விக்னேஷ் சிவனின் ஆதார்ச கதாநாயகனான விஜய் சேதுபதி, இந்த படத்தின் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.
இந்த நிலையில் லவ் டுடே படம் மூலம் தமது நடிப்பையும் திறமையும் வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரதிப் ரங்கநாதனும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி பிரதீப் ரங்கநாதன் என இரண்டு கதாநாயகர்களை வைத்து முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைக்கதையை விக்னேஷ் சிவன் எடுக்க உள்ளார். இயக்குனராக அவதாரம் எடுத்து தற்போது நடிகனாக தன்னை நிரூபித்துள்ளதால் விக்னேஷ் சிவனின் கதைக்கு பிரதீப் ரங்கநாதனும் ஓகே சொல்லிவிட்டார். முதல்முறையாக பெரிய இயக்குனர் மற்றும் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது பிரதீப் ரங்க நாதனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தல அஜித் 62 ஆவது படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே தனது படத்தையும் ரிலீஸ் செய்ய விக்னேஷ் சிவன் முதலில் திட்டமிட்டு இருந்தாராம் .ஆனால் நடிகை நயன்தாரா கொடுத்துள்ள யோசனை இன்னும் கோலிவுட்டை சூடு ஏற்படுத்தியுள்ளது. தல 62 படம் எப்போது ரிலீஸ் ஆகிறதோ அதே நாளில் இந்த படத்தையும் திரையரங்கில் ரிலீஸ் செய்து தன்னுடைய திறமையை நிரூபித்து காட்டு என நயன்தாரா உத்வேகம் கொடுதுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.