Saturday, July 5, 2025
- Advertisement -
Homeசினிமாவாரிசு 50வது நாள் கொண்டாட்டம்.. சென்னையில் சிறப்பு காட்சி

வாரிசு 50வது நாள் கொண்டாட்டம்.. சென்னையில் சிறப்பு காட்சி

- Advertisement -

இயக்குனர் வம்சி  இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை பல சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படத்தைப் பற்றிய ஒரு தகவல் தற்பொழுது வெளிவந்திருக்கிறது.

வாரிசு திரைப்படம் திரையரங்குகளை வெற்றிகரமாக ஓடி வந்த இந்த நிலையில் இந்த திரைப்படத்தினுடைய ஐம்பதாவது நாளை கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 11 மணி அளவில் வாரிசு திரைப்படத்தின் உடைய 50 ஆம் நாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவிற்கு படக்குழுவினர்கள் இயக்குனர்கள் என்று எல்லாரும் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழா சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் நடைபெற இருக்கிறது என்ற தகவல் தற்பொழுது வெளிவந்திருக்கிறது.

- Advertisement -

இந்து திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது திரையரங்கில் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் ஓடிடியில் த பார்ப்பது தளபதி ரசிகர்களுக்கு என்றும் சலிக்காத ஒன்றுதான். வெளிநாடுகளில் சிம்ப்ளி சவுத் என்று சொல்லப்படும் ஓடிடி வாரிசு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த வாரத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட திரைப்படத்தில் வாரிசு திரைப்படம் முதலிடம் பிடித்து பெரும் சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -

உலகம் எங்கும் தளபதியின் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
இதே போல் இந்த திரைப்படத்தினுடைய பாடல்களும் பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் நடித்து வருகின்ற இந்த நிலையிலும் இவர் நடித்து முடித்து திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி அடைந்த வாரிசு திரைப்படத்தைப் பற்றிய பேச்சு இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. அப்படி ஒரு தாக்கத்தை இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.விழாவிற்கு தளபதி விஜய் வருவாரா என்பது சந்தேகத்தின் அடிப்படையில் இருக்கிறது. ஏற்கனவே நடிகர் விஜய் லியோ திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular