தமிழ் சினிமாவில் பிற்போக்குத்தனமான கருத்துக்களையும் ஜாதி ரீதியான படங்களையும் எடுத்து வரும் இயக்குனர் மோகன் ஜி. மற்ற அரசியல் கட்சிகள் மீது புகார் கூறவே இரண்டு படங்களை மோகன் ஜி எடுத்துள்ளார். அதில் கூறப்பட்ட அரசியல் கருத்துக்காக பரபரப்பு ஏற்பட்டு அதற்காக ஒரு சில மக்கள் அந்த படத்தை கண்டனர்.
இதன் மூலம் போட்ட காசை கல்லா கட்டும் யுத்தியை இயக்குனர் மோகன் ஜி பின்பற்றி வந்தார். இந்த நிலையில் மோகன்ஜி எடுத்த பகாசூரன் திரைப்படமும் தோல்வியை தழுவியது. செல்வராகவனுக்கு சிலர் ரசிகர்கள் இருந்தார்கள். அதுவும் இந்த படம் நடித்தது பிறகு அவர்களும் சென்று விட்டனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் தோல்வியை தழுவியது.
பல்வேறு திரையரங்குகளில் பகாசூரன் நீக்கப்பட்டு அதற்கு முன்பு ரிலீசான டாடா திரைப்படமே திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விளம்பர யுக்தியாக படத்தின் தயாரிப்பாளர் கௌதம் பகாசூரன் இயக்குனர் மோகன் ஜிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அஜித்தின் மச்சானான ரிச்செர்டும் உடன் இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஓடாத படத்திற்கு எதற்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசாக கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்னும் சிலர் வடிவேலு காமெடியை வைத்து வெற்றியாளர் என தாங்களே கோப்பையை வாங்கிக் கொண்டதாக மீம்ஸ் போட்டு வறுத்து எடுக்கிறார்கள். இந்த நிலையில் பகாசூரன் திரைப்படத்திற்கு இயக்குனர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளதற்கு மோகன் ஜி வருத்தம் தெரிவித்துள்ளார். இயக்குனர் அமீரிடமிருந்து தாம் இந்த கருத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.மோகன் ஜி யை இந்துத்துவாவாதி என இயக்குனர் அமீர் சாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.