தற்போதைய தமிழ் சினிமாவின் சுவாரசிய செய்தியாக நாளுக்கு நாள் லியோ திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்கள் தான் வருகிறது. லியோ திரைப்படத்தின் ஒரு நடிகனாக நடித்திருக்கும் இயக்குனர் மிஸ்கின் ஒரு கடிதத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பிசாசு போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மிஸ்கின்.
தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
லியோ திரைப்படத்தில் நடித்த போது அங்கு அவருக்கு கிடைத்த அனுபவங்களை பற்றி ஒரு கடிதம் ஆக எழுதி இருக்கிறார். இயக்குனர் மிஷ்கின் மேலும் இதில் இவர் பணியாற்றியபோது அவருடன் இருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு அறிவு மற்றும் தளபதி விஜய் போன்றவர்களுடைய குணாதிசயத்தை பற்றியும் இதில் கூறியிருந்தார்.
இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன் என்று அந்த கடிதத்தை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் மிஸ்கின். கடிதத்தில் காஷ்மீரில் மைனஸ் 12 டிகிரி குளிரில் பணியாற்றியதாகவும் இந்த திரைப்படத்திற்காக 50 பேர் கொண்ட பட குழு அமைந்திருந்ததாகவும் இயக்குனர் மிஸ்கின் குறிப்பிட்டு இருந்தார்.
படத்தில் ஒரு சண்டைக் காட்சி மிக அருமையாக படமாக்கப்பட்டு இருப்பதை கூறி ஸ்டண்ட் மாஸ்டர் அன்பரிவை பெருமைப்படுத்தி இருந்தார் இயக்குனர் மிஷ்கின். அதேபோல் தான் ஒரு தயாரிப்பாளர் என்பதை மறந்து ஒரு தொழிலாளியாக நின்று செயலாற்றியதாக தயாரிப்பாளர் லலித்தை பற்றி புகழாரம் பூட்டி இருந்தார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி கூறும் பொழுது ஒரு உரிமையான முறையில்” என் லோகேஷ் கனகராஜ்” என்று குறிப்பிட்டிருந்தார் இயக்குனர் மிஸ்கின். மேலும் என்னுடைய கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினார். நான் அவனுக்கு முத்தமிட்டேன் என்று இவர்கள் அன்பு பரிமாற்றத்தை பற்றி விவரித்திருந்தார்.
அதைப்போல் தளபதி விஜய் என் தம்பி என்று கூறி அவரோடு நான் நடித்தது மிகுந்த சந்தோஷம் அடைகிறேன் அதை என்றும் நான் மறக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இயக்குனர் மிஷ்கின் இறுதியில் வியோ திரைப்படம் பெரிய வெற்றி அடையும்
அன்புடன் மிஸ்கின் என்று கடிதத்தை நிறைவு இயக்குனர் மிஸ்கின்.