கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ரித்து வர்மா ஆகியோரின் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படம் வெளியானது. நகைச்சுவை, திரில்லர் கலந்த காதல் திரைப்படம் ஆகும். இவை மிக அழகாக இயக்கியிருந்தார் தேசிங்கு பெரியசாமி.
திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. இதை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேசிங் பெரியசாமி இடம் இது போன்ற ஒரு நல்ல கதை இருந்தால் உங்கள் திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்று கூறியிருந்தார். இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அவருக்கு என்று ஒரு கதையை எழுதி காட்டினார் இயக்குனர் தேசிங் பெரியசாமி. ஆனால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.
இதே போன்று தான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இடமும் தான் திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறி பின்பு அவருக்கு என்று ஒரு கதை வந்தவுடன் அதை மறுத்துவிட்டார்.
இதனால் ஏமாற்றமடைந்த இயக்குனர் தேசிங் பெரியசாமி சற்றும் தளராது எஸ் டி ஆர் ஐ வைத்து திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
இந்தத் திரைப்படம் 100 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட இருக்கிறது. நடிகர் சிம்புவிற்கு சினிமா வாழ்வில் இவ்வளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட இருக்கும் முதல் திரைப்படம் ஆகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மாநாடு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்த எஸ் டி ஆர் க்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், ஹிந்தி போன்ற பிரபலமான மொழிகளில் இந்த திரைப்படம் இயக்கப்பட இருக்கிறது. இதனால் இந்த திரைப்படம் ஃபேன் இந்தியன் ப்ராஜெக்ட் இன்று கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் ஒரு பழமையான காலத்தில் கதைக்களம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நிறைய சண்டை காட்சிகள் இருக்கப்படும் என்பதால் இதை ஒரு பீரியட் ஆக்ஷன் ஃபிலிம் என்றும் கூறப்படுகிறது .
அதை போல் இந்த திரைப்படத்தின் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தேசிங் பெரியசாமி ஒரு நல்ல இயக்குனர் என்பதால் எஸ்டிஆர் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் எஸ் டிஆர்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.