Wednesday, May 8, 2024
- Advertisement -
Homeசினிமாகாற்று வாங்கும் திரையரங்கம்.. காப்பாற்றுவாரா ஜெயம் ரவி, சிம்பு

காற்று வாங்கும் திரையரங்கம்.. காப்பாற்றுவாரா ஜெயம் ரவி, சிம்பு

- Advertisement -

தமிழ் சினிமாவில் பொதுவாக எப்போதுமே பிப்ரவரி மாதமும் மார்ச் மாதமும் வறண்ட மாதமாகவே கருதப்படும். ஏனென்றால் பள்ளி கல்லூரி தேர்வுகள் என மாணவர்கள் பிசியாக இருப்பார்கள். இதன் காரணமாக திரைப்படங்கள் இந்த மாதத்தில் அதிகமாக வெளியிடப்படாது.

பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் ஏப்ரல் 14ஆம் தேதியை குறி வைத்து ரிலீஸ் செய்யப்படும்.  இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதத்தில் வெளியான படங்கள் எதுவும் பெரிய வெற்றி அடையாது. இந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆனதால் பெரும்பான்மையான மக்கள் அந்தப் படங்களை திரையரங்குகளில் பார்த்து விட்டார்கள்.

- Advertisement -

இனி அவர்கள் கோடை கால விடுமுறையை மையமாக வைத்து வெளியாகும் படங்களை தான் பார்க்க திரும்புவார்கள். சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படமும் இரண்டு வாரத்திற்கு மேல் தாங்கவில்லை. வாத்திக்கு பிறகு எந்த பெரிய படமும் தற்போது வரை வெளியாகவில்லை.

- Advertisement -

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பகிரா திரைப்படமும் கலமையான விமர்சனத்தை பெற்றுள்ளது. எனினும் சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் பொதுமக்கள் இடையே அது பிரதிபலிக்கவில்லை. இதனால் வரும் மார்ச் 10 ஆம் தேதி ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் இந்த போக்கை மாற்றுமா? என திரையரங்கு உரிமையாளர்கள் காத்து இருக்கிறார்கள்.

மார்ச் மாதம் தேர்வு காலம் என்பதால் அதிக வசூல் கிடைக்காது என்பதற்காக அகிலன் திரைப்படத்தை வெறும் 11 கோடி ரூபாய்க்கு தான் திரையரங்கு உரிமம் விற்கப்பட்டிருக்கிறது. இதனால் அகிலன் திரைப்படம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தாலே வெற்றி படமாக கருதப்படும். இதைத்தவிர ஹாலிவுட் திரைப்படமான ஆடம் டைவர் 66 மில்லியன் யேர்ஸ் ஏகோ என்ற படம் ரிலீஸ் ஆகிறது. டைனோசரை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் இதற்கு மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்படும் என்று நம்பிக்கை திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் உள்ளது.

தற்போது பெரிய படம் என்றால் அகிலனும் அதன் பிறகு சிம்பு நடித்த பத்து தல திரைப்படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை பாகம் ஒன்று திரைப்படம் தான் உள்ளது. எனினும் சிம்பு மற்றும் வெற்றிமாறன் திரைப்படம் மார்ச் கடைசியில் தான் ரிலீஸ் ஆகிறது.

இதனால் மார்ச் மாதம் முழுவதும் பல்வேறு திரையரங்குகள் வறண்ட நிலையிலே காணப்படும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் பல சிறிய திரைப்படங்கள் அடுக்கடுக்காக ரிலீசாக உள்ளது. இதற்கு மக்கள் யாரும் திரையரங்குகளுக்கு வர மாட்டார்கள் என்பதால் பெரிய நடிகர்களின் பழைய படங்களை ரிலீஸ் செய்ய கோலிவுட் வட்டாரங்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Most Popular