தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு பல்வேறு கதாபாத்திரங்களை நேற்று நடித்த நடிகர் என்றால் அது விக்ரம் தான். டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய பிறகு நடிகராக உச்சத்தை தொட்டவர் விக்ரம்.
எனினும் நடிப்பிலும் அவருக்கு பல்வேறு படங்கள் ஓடாமல் போகி, பிறகு விபத்து ஏற்பட்டு திரைத்துறை விட்டே விலகி விடலாம் என நினைத்த நிலையில் தான் அவருடைய வாழ்க்கை ஏற்றம் பெற்றது.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெரும் வெற்றியை பெற்றது. இதனால் மகிழ்ச்சியில் உள்ள நடிகர் விக்ரம் அவருடைய ஊதியத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
அதன் பிறகு ரிலீசான கோப்ரா பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
எனினும் விக்ரம் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பது திரைத்துறை வல்லுனர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. மகான் திரைப்படத்தில் நடித்ததற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் விக்ரம் பா ரஞ்சித்தின் தங்களான் படத்திற்காக 22 கோடி ரூபாய் வரை சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
இதே போன்று இனி நடிக்கும் படங்களுக்கு நடிகர் விக்ரம் 30 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் வெற்றி மற்றும் தங்கலான் படத்தின் வியாபாரம் தற்போது பல ஏரியாக்களில் அதிக ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது.
மேலும் விக்ரமின் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய துருவ நட்சத்திர படமும் சிறப்பாக வந்திருப்பதால் அதுவும் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என விக்ரம் நம்புவதால் தற்போது ஊதியத்தை ஏற்றி விட்டதாக கூறப்படுகிறது.
இதேபோன்று பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு தயாரிப்பாளர்கள் வெளியேவிலிருந்து பெரிய அளவில் பைனான்ஸ்க்கு பணம் வாங்குவதாக தெரிகிறது. நமது பெயரை சொன்னால் இவ்வளவு பணம் கிடைக்கிறதா என்று நினைப்பில் ஹீரோக்களும் தங்களது ஊதியத்தை படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் உயர்த்தி விடுவதாக திரைத்துறை வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.