தமிழ் சினிமாவில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்றால் அது 2.0 தான். ஆனால் அந்தப் படத்திற்கு தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் இயக்குனர் சங்கர் மீது தமிழ் ரசிகர்கள் பல விமர்சனங்களை வைத்தார்கள். இதனால் கடுப்பான சங்கர் தமிழ் சினிமாவை விட்டுவிட்டு தெலுங்கு மற்றும் பாலிவுட்டுக்கு சென்றார்.
தனது அன்னியன் திரைப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய சங்கர் முடிவெடுத்தார். எனினும் அந்த பட பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. கமல்ஹாசனின் கோரிக்கையின் பெயரில் இந்தியன் 2 படத்தை சங்கர் எடுக்க தொடங்கினார். அந்த படம் விபத்தின் காரணமாக தடை பட்ட நிலையில் தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க சங்கர் முடிவெடுத்தார்.
தற்பொழுது இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் சங்கர் இயக்கி வருகிறார். ராம் சரணின் இந்த புதிய திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தின் தலைப்பை வரும் மார்ச் 27ஆம் தேதி ராம் சரனின் பிறந்த நாளன்று ரிலீஸ் செய்ய படக் குழு முடிவு எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு சி இ ஓ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இது ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாக பொறுப்பு என்ற அர்த்தம் கிடையாது. தலைமை தேர்தல் அதிகாரி என பொருள்படும் சி இ ஓ என்பதை குறிக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் நடிகர் விஜயகாந்த் நடித்த தென்னவன் திரைப்படத்தின் ரிமேக்காக இது இருக்கலாம் என கூறப்படுகிறது. தென்னவன் திரைப்படத்தில் விஜயகாந்த் இதுபோன்று தலைமை தேர்தல் அதிகாரியாக வந்து தேர்தலில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வார்.
இதன் மூலம் பல எதிரிகளை சம்பாதிப்பார். இந்தப் படம் விஜயகாந்த் க்கு மிகப்பெரிய கம்பக்கை கொடுத்தது. தற்போது இந்த படத்தை தெலுங்கில் சிறிய மாற்றங்களுடன் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கர் எப்போதுமே இது போன்ற கதையை புகுந்து விளையாடுவார் என்பதால் இந்த படம் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.