தமிழ் சினிமாவின் உடைய ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் கொண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை பற்றிய அப்டேட்ஸ்கள் தற்பொழுது வந்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லியோ பட குழு காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது
இதில் தளபதி விஜய் உடன் நடிகை திரிஷா பிரியா ஆனந்த் மிஸ்கின் போன்றவர்கள் பிரபலங்களும் காஷ்மீரில் எடுக்கப்பட்ட காட்சியில் இடம்பெற்றிருந்ததாக தகவலும் வெளிவந்தது. இப்பொழுது வந்த தகவலின் காஷ்மீர் படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் சென்னையில் பத்து நாட்கள் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
அதன் பிறகு லியோ பட குழு ஹைதராபாத் சென்று அங்கு 15 நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபட உள்ளது. இவற்றைத் தொடர்ந்து வருகின்ற மே மாதத்தில் லியோ திரைப்படத்தின் உடைய ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு செய்யப்பட இருக்கிறது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
ஆரம்பத்திலே கூறியது போல் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான தீவிர வேலையில் பட குழுவினர்கள் இருக்கிறார்கள். இதனால் தளபதி ரசிகருக்கு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதனிடையே கேரளாவில் லியோ படத்திற்கு 18 கோடி ரூபாய் வரை திரையரங்கு உரிமம் விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் முந்தைய படமான வாரிசு 12 கோடி ரூபாய் அளவில் வசூலை பெற்ற நிலையில் அதைவிட அதிக தொகைக்கு லீவு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜன் முந்தைய படமான விக்ரம் கேரளாவில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.