பாலிவுட் சினிமாவின் முதன்மை நடிகரான ஷாருக்கான் வைத்து தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கி வரும் ஜவான் திரைப்பட திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தத் திரைப்படம் புனே, மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் நடந்தது.
மேலும் நடிகை நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு முதல் ஹிந்தியில் நடிக்கும் திரைப்படம் ஆகும். இவர்களுடன் இணைந்து விஜய் சேதுபதியும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆக்சன் காட்சி தற்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காட்சியில் நடிகர் ஷாருக்கான் மாசாக எதிரிகளை அடித்து சண்டை போட்டுக் கொண்டிருப்பது போன்று இருக்கிறது. ஹிந்தி மட்டும் இல்லாமல் எல்லா மொழிகளிலுமே நடிகர் சாருக்கானுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த காட்சியை பார்க்கும் பொழுது அனைவருக்கும் இத்திரைப்படத்தின் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க இவ்வாறான காட்சிகளை வெளியிடுவதால் படக்குழுவினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாத ரசிகர்கள் இதை தீவிரமாக பரப்பி வருகிறார்கள். இதைக் கண்டிக்கும் வகையில் ஜாவான் பட குழுவினர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
யாராவது இணையத்தில் இந்த திரைப்படத்தைப் பற்றிய காட்சிகளையோ இல்லை அதிகாரப்பூர்வமற்ற தகவல்களையும் கண்டால், அதை பரப்புவது தவறு என்றும் அப்படி செய்வதனால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜவான் பட குழுவினர்கள் எச்சரிக்கை விட்டு இருக்கிறார்கள்.
ரசிகர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது திரைப்படத்தினுடைய ஆர்வத்தை ஒரு புறம் தூண்டினாலும் இது தவிர்க்க வேண்டிய செயலாகும். இதனால் ரசிகர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஜவான் படத்தில் வெளியான காட்சி அனிருத் மாசாக பின்னணி இசை செய்திருக்கிறார். இந்தக் காட்சியைப் பார்த்து மிரண்டு போன வட இந்திய ரசிகர்கள் யாருப்பா அட்லி என்று அவருடைய பழைய திரைப்படங்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஏற்கனவே ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் பெரிய வசூலை பெற்ற நிலையில் ஜவான் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.