சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மாவீரன். மண்டேலா எனும் அறிமுக படத்திலேயே அசத்தி தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஷ்வின் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் வேலைகள் இம்மாதம் நிறைவு பெறும் வேளையில், படக்குழு அடுத்தக்கட்ட பணியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
எப்போதும் இல்லாத அளவிற்கு சிவகார்த்திகேயனின் கேரியரில் இப்படம் முந்தைய வியாபாரத்தில் பயங்கரமாக பெருக்கெடுத்துள்ளது. ரீலீசுக்கு முன்பே கிட்ட தட்ட 100 கோடிக்கு விற்பனை செய்துவிட்டது தயாரிப்பு நிறுவனம்.
டிஜிட்டல் உரிமத்தை 35+ கோடிகளுக்கு அமேசான் நிறுவனமும் சேட்டிலைட் உரிமத்தை 30 கோடிக்கு சன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அது தவிர்த்து ஹிந்தியில் டப் செய்வதற்கான உரிமம் 10 – 15 கோடிக்கு விலை போகியுள்ளது. ஆடியோ உரிமத்தை சாரீகமா நிறுவனம் 5.5 கோடிக்கு பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயனின் மார்கெட் வளர்ந்துள்ளதற்கு இப்படம் உதாரணம். இதற்கு அவரது சமீப படங்களின் கலெக்ஷனும் ஒரு வகையில் காரணம். அதோடு தேசிய விருது வென்ற இயக்குனர் என்பதாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.
சிவகார்த்திகேயன், அதித்தி ஷங்கர், மிஷ்கின், யோகி நாபு உள்ளிட்ட சிலர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வருகிறது ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறுகின்றனர். மாவீரன் வரும் அதே நாளில் கார்த்தியின் ஜப்பான் படமும் வெளியாகி மோதுகிறது. சிவகார்த்திகேயன் – கார்த்தி மோதுவது மூன்றாவது முறையிலாவது சிவகார்த்திகேயன் வெல்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு முன் நடந்த இரண்டு மோதலில் ( தம்பி – ஹீரோ, சர்தார் – பிரின்ஸ் ) கார்த்தி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.