தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக உச்சபட்ச நடிகராக விளங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது சரிவை சந்தித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக நடிகர் ரஜினி தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் எப்போதுமே நடிகர் ரஜினியின் படம் தான் வசூலில் நம்பர் ஒன் பிடிக்கும் என்ற நிலை தற்போது மாறி, விஜய் ,அஜித், கமல் ஆகியோரின் திரைப்படங்கள் எல்லாம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ள ரஜினி தற்போது இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம் கன்னட நடிகர் சிவகுமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினி எப்போதும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ரசிகர்களை சந்திப்பது வழக்கம். கொரோனாவுக்கு முன்பு அவர் கடைசியாக தர்பார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்தார். அதன் பிறகு பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றாலும் அவருடைய அண்ணாத்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி கொரோனா காரணமாக நடைபெறவில்லை.
இதனால் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினி சென்னையில் இசை வெளியீட்டு விழாவை நடத்தி ரசிகர்களின் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடந்த பட குழு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஜூலை மாதம் ஒட்டுமொத்த பட குழுவினரும் மலேசியாவுக்கு செல்ல உள்ளனர்.இசை வெளியிட்டு விழாவை வெளிநாடுகளில் நடத்துவதன் மூலம் அங்கு வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக ரஜினி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.