ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் எதிர்பார்த்து இருக்க கூடிய படம் சாலார். கே ஜி எஃப் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் பிரசாந்த் நில், பிரபாஸ் உடன் இணைந்து இந்த படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது. கே ஜி எஃப் படத்தை எடுத்த ஹோம்பாலே நிறுவனம்தான் இதையும் எடுக்கிறது.
இந்த படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் உள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வருவதாக அறிவிக்கப்பட்டது.
புது முயற்சியாக சலார் படத்தை ஆங்கிலத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்திய படத்தின் மார்க்கெட்டை அதிகரிக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஓகே கண்மணி போன்ற படங்கள் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டது. இந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது வெளிநாட்டில் ட்ரிபிள் ஆர், பாகுபலி போன்ற படங்கள் இந்திய மொழிகளிலே பார்க்கப்பட்டு வெளிநாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இதனால் அவர்களுக்கு புரியும் மொழியில் ஆங்கிலத்தில் படத்தை டப் செய்து வெளியிட படக்கு திட்டமிட்டுள்ளனர். எப்படி ஆங்கில படம் நமது மொழிகளில் ரிலீஸ் ஆகிறதோ, இதேபோன்று அவர்களுடைய மார்க்கெட்டை குறி வைக்க தற்போது அவர்களுடைய யுக்தியை சலார் கடைப்பிடிக்கிறது.
பிரபாஸ்நடித்த ராதே ஸ்யாம்,சாஹோ படுதோல்வியை தழுவியது. ஆதி புருஸ் கடுமையாக டிரைலரில் விமர்சிக்கப்பட்டு ரசிகர்கள் கேலி செய்தனர். இதனால் சலார் படத்தில் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரபாஸ் இருக்கிறார்.இந்த படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.