இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தை நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் திரையரங்களில் வெளியாக கூடிய தருணத்தில் காத்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் விஜய் சேதுபதிக்கு இணையாக முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நடித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படம் ஒரு பீரியட் திரில்லர் க்ரைம் ஸ்டோரி .இந்தத் திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ் ,கௌதம் வாசுதேவ் மேனன், சரவண சுப்பையா ,இளவரசு முன்னர் ரமேஷ் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
திரைப்படத்தில் நடிகர் சூரி ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்திருக்கிறார். அதேபோன்று நடிகர்கள் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் மக்கள் இராணுவம்” என்ற பிரிவினைவாதக் குழுவை வழிநடத்துபவர். காவல்துறை விசாரணைகள் என்ற பெயரில் அப்பாவி கிராமப் பெண்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராகப் போராடுவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இது திரைப்படத்தில் பெயருக்கு மேல் ஒரு திருக்குறள் இடம் பெற்றிருக்கிறது. இந்த திருக்குறளின் பொருள் தவறு செய்வது தன் நண்பன் என்பதால் அது தவறு என்று தெரிந்தும் தட்டிக் கேட்க துணிவு இல்லாமல் தட்டிக் கொடுத்து தள்ளி செல்பவன் உயிரோடு இருந்தாலும் அவன் பிணத்திற்கு சமம் என்பதுதான் என்பதையே இந்த திருக்குறள் குறிக்கும் பொருளின் விளக்கமாகும்.
இங்கு திருக்குறள் விளக்கம் ஓரளவு இந்த திரைப்படத்தின் கதையை சிந்திக்க வைக்கிறது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தை ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவியும் ஓடிடி உரிமையை zee 5 வாங்கி இருக்கிறது.