தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக விளங்கும் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் விஜயின் திரைப்படம் சமீப காலமாக வெளிநாட்டிலும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.ஒ தற்போது உள்ள நிலவரப்படி வெளிநாடுகளில் அதிக வசூலை ஈட்டும் தமிழ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு இருக்கிறது.
காரணம் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பெரும்பாலானோர் விஜய் ரசிகர்களாக இருக்கிறார்கள். நம் ஊரில் இருப்பது போல் வெளிநாட்டிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அமைப்பாக நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் விலை இல்லா உணவகம் என்ற பெயரில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து உணவுகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள்.
இதேபோன்று நடிகர் விஜய் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் புதியதாக ஒரு ஆப்பை உருவாக்கி வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் கனடாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். தற்போது கனடாவில் உள்ள மிகப்பெரிய மாநகரமான மிஷின் சாகா வில் உள்ள விஜய் ரசிகர்கள் அங்குள்ள உணவு வங்கிக்கு விரைவில் கெட்டுப் போகாத 500 கிலோ உணவு வகைகளை வழங்கி இருக்கிறார்கள்.
இதன் மூலம் அந்த நகரத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இந்த உணவு பயன்படும். நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த உதவியை அவரது ரசிகர்கள் செய்திருக்கிறார்கள். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்மிஷிசாகா மாநகர மேயர் பொன்னி குரோம்பி, விரைவில் கெட்டுப் போகாத உணவுகளை வழங்கிய விஜய் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Pleasure to join @CLMississauga to celebrate one of #Mississauga’s most renowned city builders, Frank Giannone. Frank’s legacy extends beyond his internationally-acclaimed development firm, his passion and dedication for community service is unparalleled! 👏 pic.twitter.com/NzuFWQpoAB
— Bonnie Crombie 🇨🇦 (@BonnieCrombie) March 24, 2023
நடிகர் விஜயின் பிறந்தநாள் முன்னிட்டு இந்த உதவியை அவர்கள் செய்து இருக்கிறார்கள். இதற்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது போன்ற அமைப்புகள் தாராளமாக உதவி செய்வதன் மூலம் நமது மாநகரத்தில் உணவில்லாமல் யாரும் கஷ்டப்பட மாட்டார்கள் என்று மேயர் பொன்னி பாராட்டி இருக்கிறார். கொரோனா காலத்திலும் இதே போன்ற உதவிகளை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் செய்து அவர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.