தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இது வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் டிரைலர் பாடல் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் பத்து தல திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என சிம்பு ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவும் பத்து தல படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த நிலையில் சிம்பு திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் வெந்து திணிந்து காடு படத்திற்கு போடப்பட்டது. இதே போல் பத்து தல திரைப்படத்திற்கும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் முதல் காட்சி 8 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. அது ஒரு புறம் இருக்க 31ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் ரிலீஸ் ஆகும் விடுதலை படத்தை ரெட் ஜெய்ண்ட்ஸ் வாங்கி இருக்கிறது. வழக்கம் போல் தற்போது ரெட் ஜெய்ண்ஸ் தனது வேலையை காட்டத் தொடங்கி இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள முன்னணி திரையரங்குகளை விடுதலை திரைப்படத்திற்கு ரெட் ஜெயின்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால் சூரி, விஜய் சேதுபதி படத்தை விட சிம்பு படத்தை திரையிட தான் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனால் விடுதலையை விட பெரும்பான்மையான திரையரங்குகளில் பத்து தல தான் போடப்படுகிறது. ஆனால் சென்னையில் முழுவதும் தற்போது ரெட் ஜெய்ன்ஸ் கட்டுப்பாட்டில் திரையரங்குகள் இருக்கிறது. இதனால் பெரிய திரையரங்குகளில் விடுதலைத் திரைப்படத்திற்கு தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இது சிம்புவின் வசூலை பாதிக்கும் என அவர்கள் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு வரவேற்பை ஏற்படுத்தாது என்றும் இதனால் பத்து தல திரைப்படம் இரண்டாவது நாளிலிருந்து பெரிய திரையரங்குகளுக்க்ஜ் ஒதுக்கப்படும் என்றும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.