Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஅயோத்தி ஓடிடி ரீலிஸ் திடீரென்று ஒத்திவைப்பு.. காரணம் என்ன?

அயோத்தி ஓடிடி ரீலிஸ் திடீரென்று ஒத்திவைப்பு.. காரணம் என்ன?

- Advertisement -

இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் அயோத்தி என்ற திரைப்படம் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு முதல் திரைப்படம் ஆகும்.இந்தத் திரைப்படம் கடந்த மார்ச் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது.

இந்தத் திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பு இது ரசிகர்களுக்கு பெரும் அளவில் எந்தவிதம் எதிர்பார்ப்பும் இல்லை. ஏன்  என்றால் நடிகர் சசிகுமார் சில நாட்களாக நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பது இல்லை. மேலும் அவர் பெரும்பாலும் துணை நடிகராகவே நடித்து வருகிறார். அதேபோல் இயக்குனரும் அறிமுகமில்லாதவர் என்பதால் இந்த திரைப்படம் சற்று எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்து வந்தது.

- Advertisement -

பிக் பாஸ் உலக நாயகன் கமலஹாசன் எதிர்பாராதது எதிர்பாருங்கள் என்று அடிக்கடி கூறுவார். அதே போல் இந்த திரைப்படம் எதிர்பாராத விதமாக தற்போது பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் சசிகுமாருக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல வெற்றியை தந்தது.

- Advertisement -

ஆரம்ப காலத்தில் இவர் நடித்த  சுப்ரமணியபுரம், சுந்தர பாண்டி போன்ற திரைப்படங்கள் நிறைய நாட்கள் திரையரங்குகளில் ஓடி வெற்றி அடைந்தது. அதற்குப் பிறகு தற்பொழுது இந்த அயோத்தி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

திரைப்படத்தை இன்று ஜி5 இல் வெளியிட இருந்தது. திரையரங்குகளில் இன்றும் ரசிகர்கள் வந்து பார்த்து மகிழ்கிறார்கள் என்பதால் இந்த திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் ஏழாம் தேதி ஓடி டி யில் வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். ஒடிடியில் தள்ளி போக காரணம் அயோத்தி படத்தின் கதை என்னுடையது என வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவதால், ஜி5 யிலிருந்து தள்ளிப்போவதாகவும் கூறப்படுகிறது.

சுவாரசியம் என்னவென்றால் நடிகர் ஜெயம் ரவி படிப்பில் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கிய அகிலன் திரைப்படம் கடந்த மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது.ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. இதனால் அது ஜி 5வில் வெளியானது. 
மேலும் இவற்றை தொடர்ந்து நடிகர் சசிகுமார் பகைவனுக்கு அருள்வாய்,  போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular