Wednesday, November 20, 2024
- Advertisement -
Homeசினிமாவிடுதலை படத்தில் பின்னனி இசையில் சொதப்பிய இளையராஜா

விடுதலை படத்தில் பின்னனி இசையில் சொதப்பிய இளையராஜா

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த திரைப்படம் மார்ச் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விடுதலை திரைப்படம் வெற்றிமாறன் படத்திலேயே மிகவும் சிறப்பாகவும், பார்ப்பதற்கே அச்சத்தை மூட்டும் வகையில் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் பதற வைக்கும் அளவுக்கு இருப்பதாகவும், ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் முதல் நாள் வசூலை விட அடுத்தடுத்த நாள் வசூல் மிகவும் அதிகமாக வருவதால்,இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தின் பின்னணி இசையில் இசை அமைப்பாளர் இளையராஜா சொதப்பி விட்டதாக ரசிகர்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

- Advertisement -

படத்திற்கு ஏற்ப இசையும் காட்சிக்கு ஏற்ப இசையையும் இளையராஜா கொடுக்க தவறிவிட்டதாகவும் ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இளையராஜா ஒரு இசை ஜாம்பவான் என்பதற்காக அவர் சரியாக பணியாற்றவில்லை என்பதை விமர்சிக்காமல் இருக்க முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

விடுதலை திரைப்படத்தில் பின்னணி இசை மிகவும் சுமாராக இருப்பதால் அது படத்தின் பெரிய மைனசாக உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெற்றிமாறனின் முந்தைய திரைப்படங்களான அசுரன் போன்றவை பின்னணி இசை பிரமிக்கும் வகையில் இருக்கும். படத்தின் வேகத்தை அது கூட்டும். ஆனால் விடுதலை திரைப் படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை பாடத்தின் வேகத்தை குறைத்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சில காட்சிகளுக்கு பின்னணி இசை ஏற்ப வகையில் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.எனினும் விடுதலைப் படம் வெற்றி அடைந்ததை எடுத்து படக்குழுவினர் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இளையராஜா இல்லத்திற்கு சென்று அவருக்கு நன்றி தெரிவித்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular