நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் விடுதலை. காமெடி நடிகரான சூரியை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்ததுமே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இதன் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்தப் படத்திற்கு முதலில் இரண்டு கோடியில் இருந்து நான்கு கோடி ரூபாய் தான் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால் கதை பெருசாக படத்தின் பட்ஜெட் மெல்ல மெல்ல அதிகரித்தது. ஒரு கட்டத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் சென்றது. விஜய் சேதுபதி படங்களே தற்போது ஓடாத நிலையில் சூரியை வைத்து இத்தனை கோடி பட்ஜெட் கொடுக்கிறார்களே என்ற சந்தேகம் அனைவருக்கும் மத்தியில் இருந்தது.
ஆனால் அதனை எல்லாம் வெற்றிமாறன் என்ற பிராண்ட் உடைத்து விட்டது. இயக்குனர் வெற்றிமாறனுக்காகவே இந்த படத்தை ரசிகர்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு சென்று வருகின்றனர். முதல் நாளில் மட்டும் விடுதலை திரைப்படம் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் முதல் நாளை விட இரண்டாவது நாளும் இரண்டாவது நாளை விட மூன்றாவது நாள் வசூல் அதிகமாக வந்திருக்கிறது.
இதன் மூலம் போட்ட பணத்தை 60 சதவீதத்திற்கு மேல் தயாரிப்பாளர் எடுத்துவிட்டார். ஆனால் தற்போது விஷயம் அதுவல்ல. விடுதலை படத்தில் இரண்டு பாகத்திற்கும் தற்போது ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட தயாரிப்பாளர் அனைத்தையும் சுமார் 40 கோடி ரூபாய்க்கு விற்று உள்ளார்.
இதன் மூலம் படத்திற்காக போட்ட பணத்தை விட இரண்டு மடங்கு தயாரிப்பாளர்களுக்கு திரும்பி கிடைத்துள்ளது. இதன் மூலம் நடிகர் சூரியின் மார்க்கெட்டும் எகிறி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் தோல்வியை கொடுக்காத இயக்குனர் என்ற பெருமையை வெற்றிமாறன் பெற்றுள்ளார்.