Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாஎன்ன தெறி வாசம் வருது? லியோ படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

என்ன தெறி வாசம் வருது? லியோ படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

- Advertisement -

2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் லியோ. நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றும் இந்தத் திரைப்படம் கடந்த 52 நாட்களாக காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிறிய ஓய்வுக்குப் பிறகு லியோ திரைப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. காஷ்மீரில் பாதி படத்திற்கான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன. இது குறித்து ஏற்கனவே பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், 60 நாட்கள் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து விட்டதாகவும் இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு எஞ்சி இருப்பதாகவும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் சென்னையில் இன்று இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். லியோ படத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் லியோ படத்தின் கதை கொஞ்சம் தெறி போல் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதாவது விஜய் தெறி படத்தில் தான் போலீஸ் அதிகாரியாக இருந்ததை மறைத்து கேரளாவில் பேக்கரி வைத்து அமைதியான வாழ்க்கையை வாழ்வார். பின் வில்லன் அவரை கண்டுபிடித்ததும் சென்னைக்கு விஜய் திரும்பி வில்லனுடன் மோதுவார். இந்த நிலையில் லியோ திரைப்படத்திலும் அதேபோல் விஜய் காஷ்மீரில் சாக்லேட் ஃபேக்டரி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென்று வில்லன்கள் அவரை கண்டுபிடித்து விடுகின்றனர்.

அதன் பிறகு அவர்களை பழிவாங்க சென்னைக்கு விஜய் வருவது போலவும் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் 52 நாட்கள் காஷ்மீரில் ஷூட்டிங் முடித்துவிட்டு தற்போது சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே தெறி படமே சத்ரியன் படத்தின் ரீமேக் என்று அனைவரும் கூறிவரும் நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தெறி படத்தையே திரும்பி எடுத்து வைத்திருக்கிறாரா என்ற நெட்டிசன்களும் கிண்டல் அடித்து வருகின்றன.

Most Popular