சூர்யா திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தான் சூர்யா 42. இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்த திரைப்படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வர உள்ளது. பழங்கால கதையை மையமாக வைத்து சூர்யா 42 படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் நிலை என்ன என்பது குறித்து ஸ்டூடியோ கிரின்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தனஜெயன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இதில் சூர்யா படத்திலேயே அதிக வியாபாரம் ஆகும் திரைப்படம் என்று பெருமையை சூர்யா 42 பெறும். இந்த படத்தின் ஓடிடி உரிமம் என்பது கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
இதேபோன்று இந்த படத்தின் ஆடியோ உரிமம் பெருந்தொகைக்கு செல்ல உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் உள்ளிட்ட பெரும் கலைஞர்கள் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என தீவிரமாக உழைத்து வருகின்றனர். தற்போது பண்டைய கால காட்சிகளை தனியாக எடுக்க இருக்கிறோம்.
இதன் சூட்டிங் 60 முதல் 80 நாட்கள் நடைபெறும். இதில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்க இருக்கிறோம் தற்போது முதல் பாகத்தை மட்டும் தான் எடுக்க முடிவு செய்துள்ளோம். அதன் பிறகு தான் இரண்டாவது பாகம் ஷூட்டிங் செல்வோம் என்று தனஞ்செய்யன் கூறி இருக்கிறார். சூர்யா 42 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதில் லியோ பட பாணியில் படத்தின் ப்ரோமோ காட்சியையும் படத்தின் பெயரையும் வெளியிட ப்பட குழு முடிவெடுத்துள்ளது. இதற்காக ஏற்கனவே சூர்யா 42 படக்குழு சென்னையில் ப்ரோமோ காட்சி சூட்டிங் முடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் அண்மையில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெற்றி பெறவில்லை. இதனால் இந்த படத்தின் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சூர்யா இருக்கிறார்.