கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த்க்கு கடந்த 10 ஆண்டுகளில் மிகத் தரமான திரைப்படம் என பெரிதாக எதுவும் இல்லை. பேட்ட மற்றும் காலா என இரண்டு படங்கள் மட்டுமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. வார்த்தையில் அடக்கிவிட இயலாத அளவிற்கு கபாலி படத்தின் எதிர்பார்ப்புகள் இருந்தன, ஆனால் அதில் பாதியைக் கூட அது செய்யத் தவறியது. மிகவும் சுமாரான படமாகவே அமைந்தது.
வசூல் ரீதியாக 2.0, கபாலி ஆகிய படங்கள் வென்றிருந்தாலும் விமர்சன ரீதியாக மிகப் பெரிய அடி. அடுத்ததாக ரஜினியின் கையில் 4 திரைப்படங்கள் உள்ளன. கமலிலுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பை போல ரஜினியின் அடுத்துவரும் படங்கள் அவருக்கு தருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெலன்சின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்ட நடிப்புப் படையுடன் தயாராகி வரும் இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்கை இடிக்கவுள்ளது. ஓராண்டுக்கு மேலாக இப்படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. பீஸ்ட் சொதப்பலை ஈடுகட்ட நெல்சன் அயராதும் உழைத்து வருகிறார்.
இப்படத்திற்கு பின் ரஜினிகாந்த் 2 படங்கள் லைகா நிறுவனத்திற்கு கீழ் நடிக்கவுள்ளார். தலைவர் 169வது படமான ‘ லால் சலாம் ’ அவரது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்திற்கு கீழ் வருகிறது. இதில் ரஜினி சற்று நீண்ட கவுரவ தோற்றத்தில் மட்டுமே வருகிறார். விஷ்ணு விஷால், செந்தில் ஜீவித்தா ஆகியோரும் நடிக்கின்றனர்.
அதற்கு பின் தலைவர் 171வது படத்தை ஜெய் பீம் மற்றும் கூட்டத்தில் ஒருவன் படங்களை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். இதுவரை இப்படத்தின் அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது. தலைப்பு, போஸ்டர் என வெறும் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. அண்மையில் இப்படத்தைப் பற்றி ஓர் சூடான செய்து கிடைத்துள்ளது.
இப்படத்தில் ரஜினிகாந்த் ஓர் முஸ்லீமாக நடிக்கவுள்ளார் அதோடு போலீஸ் கதாபாத்திரத்தையும் செய்யவுள்ளார். முஸ்லிமாக ரஜினிகாந்த் செய்த திரைப்படங்கள் பெரிதாக இல்லை. ஞாயபகத்திற்கு வருவது 1995ஆம் ஆண்டு வந்த பாட்ஷா படத்தில் அவர் செய்த மாணிக் பாஷா கதாபாத்திரம் தான். அப்படிப் பார்த்தால் 28 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தில் முஸ்லிமாக நடிக்கவுள்ளார். அன்று முஸ்லிமாக இருந்து பிறகு கேங்ஸ்டராக மாறினார், இப்போது முஸ்லிம் போலீஸ் !