திரையரங்குகளில் பார்ப்பதற்கு திரைப்படங்கள் நாளுக்கு நாள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதை ரசிகர்களும் திகட்டாமல் பார்த்து ரசித்து வருகிறார்கள். ஆனாலும் பல திரைப்படங்களை ஒரு முறை பார்த்தால் போதாது மீண்டும் மீண்டும் பார்க்கும் அளவிற்கு சிறப்புமிக்கதாக அமைந்திருக்கும்.
இன்னும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் பார்க்க முடியாமல் போயிருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்களை வீட்டில் இருந்தபடியே பார்த்து மகிழவதற்காக ஓ டி டி திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் நிறைய திரைப்படங்களை ஜீ தமிழ் டிஸ்னி பஸ் ஹாட்ஸ்டார் அமேசான் பிரைம் netflix simply south போன்ற ஒடிடி தளங்களில் விட்டு வருகிறார்கள்.இந்த ஏப்ரல் ஏழாம் தேதி அன்று ஓடிடி க்களில் வெளியிடப்பட இருக்கும் திரைப்படங்கள் உடைய பட்டியல் தற்பொழுது வந்து இருக்கிறது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் இங்கிலீஷ் போன்ற எல்லா மொழிகளிலும் திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இணைய தொடர்களும் வெளியிடப்பட இருக்கிறது.
அவை என்னவென்று பார்ப்போம் முதலில் இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் இத்திரைப்படத்தை வருகின்ற ஏழாம் தேதி ஜீ 5 யில் வெளியிடப்பட இருக்கிறது. இது கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இயக்குனர் சர்ஜுன் கேம் இயக்கத்தில் கலையரசன் நடித்த புர்கா என்ற திரைப்படம் ஆஹா மற்றும் சிம்ப்ளி சவுத் என்ற தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது. என்4 என்ற திரைப்படமும் சிம்பிளி சவுத் ஓ டி டி யில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த மூன்று திரைப்படங்களும் தான் தமிழில் வெளியிடப்பட இருக்கும் திரைப்படங்கள் ஆகும்.
மேலும் பிரணய விலாசம் என்று மலையாளத் திரைப்படம் ஜி5 வில் வெளியிடப்பட இருக்கிறது. இதே போல் ரோமன்சாம் என்ற மலையாள திரைப்படமும் ஹாட் ஸ்டாரில் வெளியீடுப்பட இருக்கிறது.
இவற்றைப் போல் தெலுங்கு சினிமாவில் அசலும் என்ற திரைப்படம் ஈ டிவி வின் இல் வெளியீடு வெளியிடப்பட இருக்கிறது.இதே போல் ஹாலிவுட் பீப் என்ற திரைப்படமும் cosmos என்ற திரைப்படமும் நெட்பிளிக்சில் வெளியிடப்பட இருக்கிறது.
இப்படி தொடர்ந்து பார்ப்பதற்கு இத்தனை திரைப்படங்களை ஒடிடியில் வெளியிடப்பட இருக்கிறார்கள். இதனைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.