இயக்குனர் சிவா தலைமையில் சூர்யா வரலாற்று திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதுவரை படத்தின் புரோமோவை மட்டுமே படக்குழு வெளியிட்டது. அதில் சூர்யா போர்வீரர் போலவும் திகழ்ந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் பாலிவுட் அழகி திஷா பத்தானி நடிக்கிறார்.
பல கோடிகள் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இந்தப்படம் 10 மொழிகளில் மற்றும் 3Dயில் வெளிகியாகவும் உள்ளது. ரீலீசுக்கு முன்பே விஜய், அஜித்துக்கு வசூல் ஆகவும் லாபத்தை விட அதிகமாவே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் எடிட்டிங் வேலைகள் மிக அதிகம் குறிப்பாக வி.எஃப்.எக்ஸ். அதற்காக வெளிநாட்டு சிறந்த எடிட்டர்களை படக்குழு வரவழைத்துள்ளது.
ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் அப்டேட் எப்போது என சூர்யா ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். கடந்த மாதம் படக்குழு ஏப்ரல் மாதத்தில் படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் வெளியாகும் எனக் குறிப்பிட்டிருந்தது. டீஸர் ஷூட்டிங்கும் மார்ச் 3வது வாரத்தில் நிறைவு பெற்றது.
சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் தலைப்பு பற்றிய வதந்திகள் பரவி வருகின்றன. டிவிட்டரில் ‘ அக்னீஸ்வரன் ’ தான் சூர்யா 42 படத்தின் தலைப்பு என சிலர் கூறி வருகின்றனர். இவ்வனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அதிகாரபூர்வ அறிவிப்பை கொடுத்துள்ளது படக்குழு. படத்தின் தலைப்பு + ரீலீஸ் தேதி இரண்டும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி காலை 9:05 மணிக்கு வந்தடையும் எனத் தெரிவித்துள்ளனர்.
A Mighty Valiant Saga in 10 Languages!!! 3D🔥
— Studio Green (@StudioGreen2) April 6, 2023
Most Expected #Suriya42 Title + Release Date Announcement on 16th April, Sunday, 9.05 am.
Warrior is coming to storm 🔥#Suriya42Title @Suriya_offl @DishPatani @directorsiva @StudioGreen2 @UV_Creations @kegvraja @ThisIsDSP pic.twitter.com/uzj07LG1hR
சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் வேலைகள் அனைத்தும் மே மாதத்துடன் நிறைவு பெறவுள்ளது. அதற்கு பின் முழுக்க முழுக்க எடிட்டிங் வேலைகள் தான். பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் படக்குழு நிச்சயம் பண்டிகளை திருநாளில் வெளியிடவே என்னும். ஏற்கனவே இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை வேறு பெரிய திரைப்படங்கள் பிடித்துவிட்டன. அதனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு உலகெங்கும் ரீலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.