Monday, November 18, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித் நல்ல மனுசங்க.. ஏகே 62 படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? விக்னேஷ் சிவன் பேட்டி

அஜித் நல்ல மனுசங்க.. ஏகே 62 படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? விக்னேஷ் சிவன் பேட்டி

- Advertisement -

நடிகர் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் பணியாற்றுவதாக இருந்தது. இதற்காக கிட்டத்தட்ட எட்டு மாதம் நேரம் ஒதுக்கி திரைக்கதைகளை எழுதிய விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களையும் ஒப்பந்தம் செய்ய தொடங்கினார்.

அரவிந்த்சாமி சந்தானம் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிப்பதற்காக இருந்தனர். படத்திற்கான முதல் கட்ட பணியை விக்னேஷ் சிவன் தொடங்கிய நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

அதன் பிறகு தல 62 படத்தில் மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இது விக்னேஷ் சிவனுக்கு பெரும் இடியாக வந்து இறங்கியது. இந்த நிலையில் முதன் முறையாக இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள விக்னேஷ் சிவன்,  தல 62 படத்தில் இருந்து தாம் நீக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாக கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் இந்த நடவடிக்கைக்கும் அஜித் சாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், அஜித் சார் தயாரிப்பாளரிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு கதை கூட தன்னிடம் கேட்காமல் ஒப்புக்கொண்டதாக கூறினார். தாமும் படத்திற்கான அனைத்து வேலைகளையும் ஈடுபட்டபோது தயாரிப்பாளருக்கு படத்தின் இரண்டாவது பாகத்தில் (இண்டர்வலுக்கு பிறகு) சில பிரச்சனைகள் இருப்பதாக கூறினார்.

அதனால் இந்த படத்தை எடுக்க தயாரிப்பாளர் விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக விக்னேஸ் சிவன் மௌனத்தை கலைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் மகிழ்திருமேனி இயக்குனராக இணைந்திருப்பது தமக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுப்பதாக குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன் தமக்கு அஜித் சார் மீது எந்த வருத்தமும் இல்லை என்றும் அவரை எப்போதும் போல் தான் நேசிப்பேன் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஏகே 62 இயக்குனர் மாற்றப்பட்ட விவகாரத்தில் அஜித்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தான் இந்த நடவடிக்கை எடுத்ததும் தெளிவாக இருக்கிறது. தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் எடுத்திருந்த படத்தை கடைசி நேரத்தில் விக்னேஷ் அவனை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Most Popular