நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படத்தின் அப்டேட் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகும் என ஸ்டியோ கிரின்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தனஜெயன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அது குறித்து ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளில் சூர்யாவின் 42வது திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
இந்தப் படத்திற்கு அக்னீஸ்வரன் என பெயரிடப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகின. எனினும் இதனை உண்மை இல்லை என தெரிவித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் வரும் 16ஆம் தேதி ப்ரோமோவுடன் ரிலீஸ் ஆகும் என அறிவித்திருந்தது. இதனை கேட்டதும் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
சூர்யாவின் கெட்டப் அந்த ப்ரோமோ வீடியோவில் வரும் என எதிர்பார்த்தார்கள். கிட்டத்தட்ட லியோ ப்ரோமோ போல் இது இருக்கும் என அவர்கள் நம்பினர். ஆனால் ஏப்ரல் 16ஆம் தேதி படத்தின் பெயரும் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த அனிமேஷன் ப்ரோமோவாக தான் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் அதில் சூர்யாவின் தோற்றம் தெரிய வாய்ப்பில்லை எனும் தெரிகிறது. எனினும் மே மாதம் சூர்யா 42 தொடர்பாக ஒரு ப்ரோமோ ரீலிசாகிறது. அதில் நடிகர் சூர்யா 500 போர் வீரர் உடன் சண்டை போடுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது வெளியானவுடன் சூரியன் 42 தொடர்பான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரிக்கும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது .
தற்போது சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.சூர்யா நடிக்கும் படத்தில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவாகி உள்ள இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி தொடும் படமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.மேலும் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.