இளசுகளை தடுத்தால் அது கேட்காது! பழச அது திரும்பி பார்க்காது!
என்பது பாடல் வரி ஆனால் இவர் ஒருவர் சொன்னால் அனைத்து இளைஞர் பட்டாளமும் கேட்கும், கேட்டது அவர் சொன்னபடி நடந்தது.
அவர் வேறு யாருமில்லை! நடிகை ஷகிலா தான்!
90களில் ஷகிலா என்ற பெயரை கேட்டதுமே, இளைஞர்கள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் குஷி கொண்டாட்டம் தான். ஏனெனில் அவரது நடிப்பு அந்த வகையில் வெளிப்படையாக இருக்கும்.
அவர் திரைத்துறையில் நடித்து வந்த காலத்தில் மற்ற டாப் நடிகர்களின் படங்களைவிட அவரின் படங்கள் அதிக வசூலை தயாரிப்பாளருக்கு பெற்றுக் கொடுக்கும். இதனாலேயே பல தயாரிப்பாளர்கள் இவரின் வீட்டின் வாசலில் கால் தடுக்க காத்து நின்றார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்து ஒன்று.
இவர் சிறிது மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியான, குக் வித் கோமாளியில் அனைவரும் இவரை பாசத்தோடு அம்மா என்று அழைத்து ஷகிலாவை மகிழ்ச்சி அடையச் செய்தனர்.
இது குறித்து ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள ஷகிலா ” இத்தனை ஆண்டுகளாக வெறுமையில் வாழ்ந்து வந்தேன். ஆனால் அனைவரும் ஷகிலா அம்மா என்று அழைக்கும் போது வாழ்க்கைக்கான ஒரு அர்த்தம் புரிகிறது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் பொழுது “மலையாளத்தில் நான் நடித்த படங்கள் சென்சார் முடிந்து வந்த பிறகு, சில பிட் காட்சிகளை அதில் சேர்த்துள்ளனர். இந்த விஷயம் எனக்கு தெரிந்ததும் என்னை ஏமாற்றி விட்டார்களே, எனக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று அனைவர் மீதும் எனக்கு கடுமையான கோபம் இருந்தது. அது மட்டுமில்லாமல் நான் நடித்த 23 படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் கொடுக்காமல் வைத்து இருந்தார்கள். இதனால், தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதால், இனி மேல் அதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டேன்” என்று கூறினார்.
மலையாள நடிகர் மம்முட்டி பற்றி அவர் கூறும் போது” என்னுடைய படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தினார், படம் வெளிவராமல் தடுத்தார் என்று பலர் கூறி நான் கேள்விப்பட்டேன். மம்முட்டி மேலே எனக்கு கோபமில்லை, அவருடைய கோபம் நியாயமானது தான். அவர்கள் 5 கோடி செலவு செய்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் பத்து லட்சத்தில் படம் எடுக்கிறோம். 10 லட்சம் ரூபாய் பணம் 4 கோடி படத்தை காலி பண்ணால் யாருக்கு தான் கோபம் வராது அப்படித்தான் என் மீது அவருக்கு வருத்தம் இருந்திருக்கலாம் ” என்று கூறினார்