நளன் குமாரசுவாமி இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் திரைப்படம் இன்றும் பார்வையாளர்கள் பாராட்டும் ஓர் தரமான நகைச்சுவைத் திரைப்படம். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் என பல நட்சத்திரங்கள் நடித்த இந்தப் படத்தில் பல்வேறு டுவிஸ்ட்கள், காமெடி, வாழ்கை அர்த்தங்கள், பாடல்கள் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ச்சிப் படமாக வரும் சூது கவ்வும் 2 திரைப்படத்தில் ஹீரோவாக சிவா நடிக்கவுள்ளார். அவருடன் சத்யராஜும் இணையாவுள்ளார். முந்தைய பாகத்தில் இருந்து ராதா ரவி, ரமேஷ் திலக், கருணாகரன் மூவரும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி கவுரவத் தோற்றத்தில் சிறப்பிக்கவுள்ளார்.
இரண்டாம் பாகம் அறிவிப்பை கொண்டாடும் ரசிகர்களுக்கு அதே வேகத்தில் ஓர் அதிர்ச்சி. முதல் பாகத்தை இயக்கிய நளன் குமாரசுவாமி இந்த பிராஜெக்ட்டில் இடம்பெறவில்லை. அவர் இடத்தில் புதிய இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் அப்பணியை தொடரவுள்ளார்.
இயக்குனர் எம்.எஸ்.அருணின் முதல் படம் பிரபுதேவா நடித்துள்ள ‘ யுங் சிங் முங் ’ ஆகும். இந்தத் திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதற்கு முன்பே அவருக்கு மிகச் சிறந்த படைப்பின் தொடர்ச்சிப் படமை இயக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதை அவர் சிறப்பாக பயன்படுத்துவதில் தீவிரமாக இருப்பார்.
பல்வேறு சிறந்த திரைப்படங்களை தந்த மற்றும் முதல் பாகத்தை தயாரித்த சி.வி.குமார் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். முழுக்க முழுக்க முதல் பாகத்தை தொடரும் கதையாக பார்ட் 2 அமைகிறது. அதனாலே முதல் பாகத்தில் நடித்த பலர் இதிலும் இடம்பெற்றுள்ளனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது. ஷூட்டிங் ஏப்ரல் 17 முதல் துவங்குகிறது.