நடிகர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதுதான் தற்போது கேள்வியாக இருக்கிறது ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார். இந்த படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுக்கும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது 120வது திரைப்படம் ஆன ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில் இஸ்லாமிய போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்க உள்ளார்.
இதனை அடுத்து தனது கடைசி படமாக லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணைய உள்ளதாகவும் இதற்கான கதையை தயார் செய்யும்படி லோகேஷ் கனகராஜ் இடம் ரஜினிகாந்த் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்தை கமலின் ராஜ் கமல் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டது.
எனினும் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து படங்கள் எஞ்சியிருப்பதால் அவர் எப்படி தன்னை செய்வார் என்று கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியை வைத்து வால்டர் வீரையா என்ற திரைப்படத்தை இயக்குனர் பாபி ரவீந்திரா இயக்கினார். இந்த படம் பெரும் ஹிட் ஆகி 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில் இயக்குனர் பாபி ரவிந்த்ராவிடம் தமக்காக கதை ஒன்றை எழுதும்படி ரஜினிகாந்த் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்சன் படத்தை எழுதி சொல்லுங்கள் என ரஜினி கூறியிருப்பதாகவும் தற்போது அதற்கான பணியை இயக்குனர் பாபி ரவீந்திரா எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது.கிட்டதட்ட இந்த படம் ஓகே ஆகும் நிலையில் இருக்கிறது. இதனால் ரஜினியின் 171 திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.