Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசினிமாஇதை தான் ரொம்ப நேரமா எடுத்தீங்களா? கங்குவாவை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்

இதை தான் ரொம்ப நேரமா எடுத்தீங்களா? கங்குவாவை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களால் ஒன்றாக சூர்யாவின் 42 வது திரைப்படம் இருந்தது. சூர்யா தொடர்ந்து தோல்வி படம் கொடுத்து வந்ததால் மிகப்பெரிய வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இதனால் சிறுத்தை சிவா உடன் இணைந்த சூர்யா பெரும் பட்ஜெட்டில் தனது 42வது படத்தை நடித்து வந்தார். இந்த படத்தின் பெயர் இன்று அனிமேஷன் வீடியோவுடன் ரிலீசானது. சூர்யா ரசிகர்கள் இந்த படம் கேம் ஆப் த்ரோன்ஸ் லெவலுக்கு எதிர்பார்த்தனர். ஆனால் இது கந்தசாமி அளவு தான் இருந்தது. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

- Advertisement -

மேலும் விஜய் ,அஜித் ரசிகர்கள் இந்த படம் மீது ஒரு நல்ல எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் படத்தின் பெயரும் மோஷன் போஸ்டரும் கிண்டல் செய்யும் அளவுக்கு தான் இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை தான் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் பெரும் என நீங்கள் எல்லாம் சொன்னீர்களா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

- Advertisement -

கங்குவா என்ற பெயரில் ஒரு எழுத்து மட்டும் நாமம் வடிவில் இருப்பதால் படத்தின் முடிவு இப்போது தெரிந்து விட்டதாகவும் சிலர் கிண்டல் அடித்துள்ளனர்.
மேலும் கங்குவா என்ற பெயர் தமிழ் பெயர் போல் இல்லை என்றும் இதனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதே மிக சிரமம் என்றும் பொதுவான ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். வாயில் நுழையாத பெயரை பட குழு வைத்திருப்பது தவறு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இதற்கு பதிலடி கொடுத்துள்ள சூர்யா ரசிகர்கள், இது வெறும் மோஷன் போஸ்டர் தான் என்றும் படத்தின் டீசர் அல்லது டிரைலரை இல்லை. கதாநாயகனின் லுக் எப்படி இருக்கும் என்பது கூட தெரியாததால் அதற்குள் படத்தை கிண்டல் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.  கதை கிராபிக்ஸ் ஓரளவுக்கு நன்றாக இருந்தால் கூட படம் வெற்றி படமாக அமையலாம் என்று சினிமா வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

Most Popular