சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்தும் இளவட்டங்கள் யாரும் இந்தப் பெண்ணை அறிந்திருக்கவில்லை என்று கூறினால் அது ஆச்சரியமே! அந்த அளவிற்கு இவரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைத்து விதங்களிலும் களைகட்டும். அவர் வேறு யாருமில்லை வீடியோ ஜாக்கியான வி.ஜே பார்வதி. இவர் வயது பற்றி தற்பொழுது பதிவுகள் அதிகம் வெளிவந்துள்ளதால், உண்மை என்ன என்பது பற்றி அவரே பகிர்ந்து உள்ளார்.
வி.ஜே.பார்வதி செல்லமாக வி.ஜே. பாரு என்றும் அழைக்கப்படும் இவர், தமிழ் பொழுதுபோக்கு துறையில் நன்கு அறியப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வீடியோ ஜாக்கி ஆவார். அவர் தனது வசீகரமான ஆளுமை, புன்னகை மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திறன் ஆகியவற்றிற்காக அனைவராலும் அறியப்படுகிறார். பார்வதி தனது புத்திசாலித்தனம், நகைச்சுவை மற்றும் பார்வையாளர்களுடன் இணைக்கும் திறன் ஆகியவற்றால் மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளார்.
இவர் சன் மியூசிக்கில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதைத் தவிர, பல நேரடி நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, மற்றும் அஜித் உள்ளிட்ட திரையுலகில் உள்ள சில பெரிய பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்வுகளை அவர் தொகுத்து வழங்கினார். பார்வையாளர்களுடன் இணைவதற்கும், அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருப்பதற்கும் அவரது திறமை, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அவரை மிகவும் பிடித்தவராக ஆக்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடிகரும் இசை அமைப்பாளருமான ஆதியுடன் நடைபெற்ற ஒரு நேர்காணல் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. வி.ஜே பார்வதி தொகுத்து வழங்கிய நேர்காணலில், ஆதி தனது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதை நம்மால் காண முடிந்தது அதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வி.ஜே பார்வதி ஆதியிடம் “இதற்கு முன்பு நீங்கள் எந்த ஆண்டியையும் சைட் அடித்து உள்ளீர்களா” என்று கேட்டதற்கு அவர் உடனடியாக சற்றும் யோசிக்காமல் “உங்களைச் சந்திக்கும் வரை இல்லை” என்று பதிலளித்தார்
இந்த காணொளியை தற்பொழுது சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது வி.ஜே பார்வதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
Why people can’t believe my age !?? Sathyama solraen 27 dhaaan.. just because of that viral aunty moments with #HipHopTamizha and because of my over paechu people think I’m a very big girl… Ada illa ba
— vjpaaru (@parvathy_saran) April 15, 2023♥️ Nambunga lae..
அவர் அந்த பதிவில் கூறியிருப்பது “என் வயதை ஏன் மக்கள் நம்பவில்லை!?? சத்யமா சொல்கிறேன் 27 தான் ஆகுது ஆதி உடனான அந்த வைரலான ஆன்ட்டி தருணங்களாலும், என் ஓவர் பேச்சு காரணமாகவும் மக்கள் என்னை மிகவும் பெரிய பெண் என்று நினைக்கிறார்கள்,அட இல்ல பா நம்புங்க ” என்று அந்தப் பதிவில் வி.ஜே பார்வதி கூறியுள்ளார்.