நடிகர் விஜய் திரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படமாக லியோ இருக்கிறது. காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைகிறார்.
இந்தப் படம் தற்போது சென்னையில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வரும் நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்காக ப்ரமோஷன் பணியில் திரிஷா ஈடுபட்டு வருகிறார். இதனால் திரிஷா செல்லும் இடத்தில் எல்லாம் ரசிகர்கள் லியோ குறித்து அப்டேட் கேட்கிறார்கள்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உங்கள் தளபதியும் லோகேஷ் கனகராஜ் நன்றாக பணியாற்றி வருகிறார்கள். லியோ படம் குறித்து இன்னொரு மேடையில் பேசுகிறேன். பணம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ரசிகர்கள் லியோ குறித்து அப்டேட் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது பேசிய த்ரிஷா நானும் நடிகர் விஜய்யும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் இணைந்துள்ளோம்.நான் விஜய்யுடன் கில்லி,திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். இது நானும் விஜய்யும் சேரும் ஐந்தாவது திரைப்படம் ஆகும்.
ஆனால் நான்கு படத்தை விட இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.ஆனால் எங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று பதில் கூறியுள்ளார். லியோ படம் வித்தியாசமாக இருக்கும் என திரிஷா கூறியுள்ளதால் ரசிகர்கள் இப்போது படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று நினைத்து வருகிறார்கள்.