Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமா2023ஆம் ஆண்டு தமிழகத்தில் டாப் 5 வசூல் செய்த திரைப்படங்கள்

2023ஆம் ஆண்டு தமிழகத்தில் டாப் 5 வசூல் செய்த திரைப்படங்கள்

- Advertisement -

நடந்து கொண்டிருக்கும் 2003 ஆம் ஆண்டில் இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ஓடி வருகிறது. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. சிலவை கலவையான விமர்சனங்களை பெறுகிறது. இன்னும் சில திரைப்படங்கள் வெளியானதும் தெரிவதில்லை, திரையரங்கை விட்டு போவதும் தெரிவதில்லை.

திரைப்படங்கள் ஆmm ஒருவரோடு ஒருவர் மோதி ஜெயிப்பது போன்று இரண்டு திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்தால் நீ ஜெயிக்கிறாயா நான் ஜெய்க்கிறேனா என்று ரசிகர்களிடம் போட்டி ஏற்படுகிறது. இவற்றில் சில திரைப்படங்கள் வெற்றியடைகிறது. அதேபோல் நல்ல வசூலையும் பெறுகிறது. உதாரணமாக தல தளபதி திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு மோதி ஜெயித்தது யாரும் மறக்க முடியாது.

- Advertisement -

அதேபோல் இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் தமிழகத்தில் நல்ல வசூல் வேட்டையை பெற்ற முதல் ஐந்து திரைப்படங்கள் என்று ஒரு பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. அவை என்னவென்று பார்ப்போம்

- Advertisement -

இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பே திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் அமைந்திருந்தது என்பதால்  24 கோடியே 80 லட்சம்  வசூலை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் நடிகர் சிம்புவிற்கு ஹாட்ட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய வாத்தி திரைப்படம் 35 கோடியே 20 லட்சம் வசூலை பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டை விட தெலுங்கில் வெளியிடப்பட்ட ஆந்திரா மாநிலத்தில் இன்னும் சிறப்பாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நகைச்சுவையின் நடிகர் சூரியன் முதன்மை கதாபாத்திரமாக நடித்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் 38 கோடியே 25 லட்சம் வசூலை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தின் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்.

கடந்த பொங்கல் அன்று வெளியிடப்பட்ட தல அஜித்தின் துணிவு திரைப்படம் ரசிகர்களுடைய பெரும் எதிர்பார்ப்பாக ஆகும் அது 116 கோடியை 40 லட்சம் வசூலை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.  எதிர்பார்த்ததை விட இந்த திரைப்படத்திற்கான வசூலும் விமர்சனமும் சற்று குறைவாக இருந்தாலும் தல ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் தன் வசப்படுத்தி ரசிகர்களின் ஆரவாரத்தோடு வெளியிடப்பட்ட இயக்குனர் வம்சி படிப்பள்ளியின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் 146 கோடியே 10 லட்சம் வசூலை பெற்று இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்த ஆண்டு தொடங்கி நான்கு மாதத்திற்குள் 5 திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வந்திருக்கிறது.இன்னும் பல திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்தால் முடங்கிக் கிடந்த சினிமா உலகம் மீண்டும் எழுந்து நிற்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

Most Popular