உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் ஆக மாமன்னன் கருதப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டார். விளையாட்டுத்துறை அமைச்சராக செயல்படுவதால் சினிமாவில் உதயநிதி ஸ்டாலினால் கவனம் செலுத்த முடிவதில்லை.
இதன் காரணமாக தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் பகத் பாஸில், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் குறித்து அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். சேலத்தில் ஒரு ஒரு வாரம் சூட்டிங் சென்றது.அப்போது நானே மாரி செல்வராஜ் இடம் சென்று என்னுடன் நடிப்பு உங்களுக்கு ஓகேவா? பிடித்திருக்கிறதா? என்று கேட்டேன்.
அதற்கு அவர் எனக்கு இப்போது சொல்ல தெரியவில்லை. பிறகு சொல்லவா என பதில் அளித்தார். இதைக் கேட்டதும் நான் ஷாக் ஆகிவிட்டேன். எட்டு நாள் சூட்டிங் சென்று விட்டு இப்படி சொல்றீங்களே என நினைத்தேன். இதேபோன்று இந்த படத்தில் நடிக்கும் பகத் பாசிலும் மாரி செல்வராஜின் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள்.
சில காட்சிகள் எல்லாம் 50 டேக்குகள் மேல் சென்று விடும். யோ, என்னை விட்டுவிடு யா என நான் மனசில் நினைப்பேன். ஆனால் பகத் பாசிலோ மாரி இந்த காட்சிகள் எனக்கு சரியாக இல்லை. இதனை நாம் மீண்டும் நாளைக்கு புதிதாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி விடுவார். அப்போது நான் பகத் பாசிலிடம். யோவ் அவரே ஐம்பது டேக்குகள் மேல் எடுத்து விட்டார்.
இப்போது போய் மீண்டும் நாளை எடுக்கலாம் என்று சொல்கிறாயே என கேட்பேன். அதற்கு பகத் பாசில் இல்லை நண்பா இது நாளைக்கு எடுக்கலாம். விக்ரமில் கூட நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறினார். அதற்கு நான் நீ நிறைய படத்தில் நடித்திருக்கிறாய் நான் அப்படியா என கூறுவேன். பகத் பாஸில் உடன் நடித்தது தனி அனுபவம். அவர் படத்திற்காக நன்றாக தயாராகி உழைத்து வருகிறார் என உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.