தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக விஜய் வலம் வருகிறார். விஜய்யின் திரைப்படங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறது. சில நடிகர்களுக்கு தோல்வி ஏற்பட்டால் சிக்கல் வரும். அதை நாம் பார்த்திருப்போம். ஆனால் நடிகர் விஜய்க்கு தொடர் வெற்றி அடைவதால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் விஜய் குழப்பத்தில் இருக்கிறார். நடிகர் ரஜினி பாட்ஷா படத்தை நடித்து பிறகு அது மாபெரும் வெற்றியை பெற்றது. இதற்கு மேல் வெற்றியே கிடையாது என்ற உச்சத்தில் இருந்த ரஜினி அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் தான் முத்து என்ற கொஞ்சம் மாஸ் குறைந்த படத்தில் நடித்தார். ஆனால் அதுவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் நடிகர் ரஜினி என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று ஆண்டுகள் நடிப்புக்கு முழுக்கு போட்டார். இதே போன்று தெலுங்கிலும் நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படங்களை நடித்த பிறகு இந்திய அளவில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றார்.
ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டதை அடுத்து அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது தடுமாறி வருகிறார். பாகுபலி பிறகு அவர் நடித்த படங்கள் வசூல் 200 கோடி 300 கோடி என தொட்டாலும் ரசிகர்களிடையே திருப்தியை ஏற்படுத்த முடியவில்லை. அந்த அளவிற்கு பிரபாஸ் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.
தற்போது இதே போன்ற ஒரு சூழலில் தான் நடிகர் விஜய் சிக்கிக் கொண்டுள்ளார். விஜயின் படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கதை சரியில்லை என்றால் கூட 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்று விடுகிறது. பல குறைகள் இருந்தும் தெலுங்கு இயக்குனர் இயக்கியும் துணிவுடன் கடும் போட்டி ஏற்பட்டும் வாரிசு திரைப்படம் 300 கோடியை அசால்டாக தொட்டுவிட்டது.
தற்போது லியோ திரைப்படம் மூலம் நடிகர் விஜய் இந்திய அளவில் சென்றுவிட்டார். இதனால் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு மீண்டும் என்ன செய்வது என்ற குழப்பத்தில் விஜய் இருக்கிறார். தன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டதால் மீண்டும் பெரிய பட்ஜெட் மாஸ் கதை என்ற ரூட்டில் செல்வதா இல்லை ஒரு கமர்சியல் படம் இன்னொரு சினிமாவுக்கான படம் என்ற ரூட்டில் செல்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
லியோ ஏற்கனவே வருமானத்தில் பெரிய சாதனை படைத்த நிலையில் அதற்கு அடுத்த உச்சம் என்றால் அட்லியுடன் படத்தில் இணைந்து மீண்டும் பணியாற்றுவது தான். ஆனால் அதுவும் ஒரு உச்சத்தை அடைந்து விட்டால் மீண்டும் விஜயால் சாதாரண கமர்சியல் படங்களில் செய்ய முடியாது. இதனால்தான் லியோவுக்கு பிறகு கோபிசந்துருடன் ஒரு கமர்சியல் படத்தை நடிக்கலாம் என முடிவெடுத்தார். ஆனால் அதற்கும் தற்போது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் உச்சத்துக்கு சென்று விட்டோம் இனி எந்த இயக்குனர்கள் எந்த கதையை தேர்ந்தெடுத்து எடுப்பது என்ற குழப்பத்தில் விஜய் இருக்கிறார்.