Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாபுர்கா படம் பேசும் ஹித்தா என்றால் என்ன? படத்தை தடை செய்ய சீமான் கோரிக்கை

புர்கா படம் பேசும் ஹித்தா என்றால் என்ன? படத்தை தடை செய்ய சீமான் கோரிக்கை

- Advertisement -

சினிமா என்பது ரசிகர்கள் பார்த்து ரசிப்பதற்காக மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்தது ஆனால் இப்பொழுது அதை பயன்படுத்தி சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தான் இயக்குனர் சர்ஜூன் இயக்கிய புர்கா திரைப்படம் சமூக வலைத்தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்லாமியர்கள் பின்பற்றி வரும் ஷரியத் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ஹித்தா என்ற முறையை புர்கா திரைப்படம் கேள்வி கேட்கிறது. முதலில் ஹித்தா என்றால் என்ன வென்று பார்ப்போம்.  கணவர் இறக்கும்பொழுது ஒரு வேலை அந்தப் பெண் கருவுற்றிருந்தால் அது உறுதி செய்வதற்கும்,  பிறர் தெரிந்து கொள்வதற்கும் தான் நாலரை மாதம் தேவைப்படுகிறது.

- Advertisement -

அதுவரை மறுமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகும். இப்படி இருப்பதால் இறந்த கணவனுடைய கரு அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்திருந்தால் அதற்கான சொத்துரிமை சரியாக கிடைக்கும். மேலும் மறுமணம் செய்து கொள்பவரும் இது முதல் கணவருடைய பிள்ளை என்பதை தெளிவாக தெரிந்து கொள்வார்.

- Advertisement -

இதனால் அந்த குழந்தையின் எதிர்காலம் எந்த குழப்பமும் இல்லாமல் இருக்கும் என்பதற்காக தான் இந்த சட்டம் பின்பற்றப்படுகிறது.அறிவியல் தான் வளர்ந்து விட்டதே இன்னும் ஏன் இந்த சட்டம் எல்லாம் என்றால் இந்த இது போன்ற அறிவியலை பயன்படுத்தி டிஎன்ஏ டெஸ்ட் ஆகியவை எடுத்தால் அந்தப் பெண்ணையும் அந்த சிசுவையும் மன உளைச்சலுக்கு தான் ஆளாக்கும்.

மேலும் மறுமணம் உடனே செய்து கொண்ட பிறகு முந்திய கணவருடைய கரு வயிற்றில் வளர்கிறது என்பது தெரிந்தால் மறுமணம் செய்து கொண்ட கணவர் ஏற்றுக்கொள்வார் என்பது என்ன நிச்சயம். இதையெல்லாம் தவிர்ப்பதற்காகவும் தான் இந்த சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதையெல்லாம் தவறு என்று கூறுவது போல் அமைந்திருக்கும் இந்த புர்கா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் முன்பு இல்லாத அளவிற்கு தற்பொழுது மதவாதம் பெருகி இருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் எதிராளியாக காட்டுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

நாட்டின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படும் வகையில் படைப்பாளிகளின் கடமையை உணர்ந்து மிகுந்த பொறுப்புணர்வுடன் படைப்புக்களை எடுக்க வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட மக்களை சீண்டி அவர்களை நம்பிக்கையை இழிவுபடுத்தி பதற்றமான சூழ்நிலையிலும் உருவாக்கும் படைப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும்  ரசிகர்களையும் சீமான் கேட்டுக்கொள்கின்றார்.

இந்த திரைப்படத்தால் இஸ்லாமிய சமூகத்தின் நம்பிக்கையையும் அவர்களின் புனித நூலான குர்ஆனையும் இழிவு படுத்துவதாக கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் விரைந்து கவனத்தில் எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மக்களை திரட்டி போராடும் என்றும் சீமான் தெரிவித்திருக்கிறார்.

Most Popular