Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாசென்னையில் கிடையாது.. ! விஜய்யின் லியோ பட ஆடியோ லான்ச்சில் ஓர் டுவிஸ்ட்.. !

சென்னையில் கிடையாது.. ! விஜய்யின் லியோ பட ஆடியோ லான்ச்சில் ஓர் டுவிஸ்ட்.. !

இந்த ஆண்டு கோலிவுட்டின் மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை பெற்றுள்ளது லியோ திரைப்படம். விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

- Advertisement -

வாரிசு பட வெளியீட்டுக்குப் பின் பூஜை மற்றும் அதிரடியான அப்டேட்களுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஆயுத பூஜை அக்டோபர் 19க்கு படம் வெளியிடப்பட வேண்டும் என்ற நோக்கில் விரைவாக பணிபுரிந்து வருகிறது படகுழு. காஷ்மீர் அட்டவணையை ஒன்றரை மாதத்தில் முடித்து சென்னை திரும்பியுள்ளது லியோ டீம்.

சென்னையில் சில நாட்கள் நிறைவு பெற்ற பின்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஏர்போர்ட் செட் அமைத்து கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் சில காட்சிகள் ஷூட் செய்யப்படவும் இருக்கிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து விட்டு போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் புரொமோஷனில் தீவிரமாக கவனம் செலுத்தப்படும்.

- Advertisement -

எப்போதும் விஜய் படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரம்மாண்ட ரசிகர் படையின் மத்தியில் சென்னையில் நடைபெறும். லியோ படம் பேன் இந்தியா படம் என்பதாகும் இந்தப் படத்தின் வசூல் 500 கோடிக்கு மேல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் படக்குழு இருப்பதாலும் ஆடியோ லாஞ்ச இன்னும் பெரிதான அளவில் நடைபெறும்.

- Advertisement -

ஆனால் அதில் ஓர் டுவிஸ்ட். வழக்கமாக சென்னையில் நடக்கும் விஜய்யின் இசை வெளியீட்டு விழா இம்முறை திருச்சி, மதுரை போன்ற தென் மாவட்டங்களில் அல்லது கோயம்புத்தூரில் நடைபெற வாய்ப்பிருப்பதாக தயாரிப்பாளர் லலித் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் இது விஜய்யின் முடிவு என்றும் கூறுகிறார்கள்.

தென் மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களை ஒன்றினைபதற்காக இதை விஜய் செய்கிறார் என்கின்றனர். மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்பத்தூர் தான் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான ஊர். பல கச்சேரிகள் நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற்றுள்ளது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 சிறப்பு நிகழ்ச்சி கூட அங்கு நடைபெற்றது. அதனால் கோயம்பத்தூரில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular