தமிழ் சினிமாவில் தற்போது அதிக வசூலை குவிக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். இந்தப் பட்டத்தை ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு மெர்சல் படத்தின் ரிலீஸ் போதே இழந்துவிட்டார். டூ பாயிண்ட் ஓ திரைப்படம் உலக அளவில் அதிக வசூலை பெற்றாலும் தமிழகத்தில் விஜய் படமே வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறது.
இந்த நிலையில் தனது திரைப்பட வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் ரஜினி இருக்கிறார். மேலும், விக்ரம் திரைப்படம் மூலம் நடிகர் கமல்ஹாசனும் தமிழகத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து தற்போது நம்பர் ஒன் நடிகர் என பெயர் எடுத்து விட்டார்.
இதனால் ஹிட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்டுள்ளது. அண்ணாத்த தோல்விக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மிகவும் நம்பி உள்ள படம் என்றால் அது ஜெய்லர் தான்.இந்த படத்தின் வசூலை அதிகரிப்பதற்காக மற்ற மொழிகளில் உள்ள பிரபல நடிகர்களை ரஜினிகாந்த் நடிக்க வைத்திருக்கிறார்.
இதன் மூலம் அதிக வசூலை பெற்று மீண்டும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை கைப்பற்ற ரஜினி முயற்சிக்கிறார். இந்த நிலையில் ஜெய்லர் திரைப்படம் முதலில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என திட்டமிடப்பட்டது. ஆனால் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் ஆகும் என்பதால் அதன் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் மாதத்திற்கு பட குழு தள்ளி வைத்தது.
தற்போது எதிர்பார்த்தபடி படம் முடியாத காரணத்தினாலும் மீண்டும் ஜெய்லர் படத்தை தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் மாதம் லியோ திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதனை எதிர்த்து ஜெய்லர் படத்தை ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் வசூலில் நம்பர் ஒன் யார் ? யார் சிறந்த டைரக்டர் என்ற இரண்டு கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். ஆனால் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வந்தால் வசூல் இருபடங்களுக்குமே பாதிக்கும். இதனை கருத்தில் கொண்டு இதுவரை தீபாவளிக்கு எந்த படமும் போட்டிக்கு வர முன்வரவில்லை. இதனால் ஜெய்லர் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாமா என்ற திட்டமும் உள்ளது. இதன் இறுதி முடிவு ரஜினி கையிலே இருக்கிறது.