நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இயக்குனர் ரவிக்குமார் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக அயலான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி தொலைக்காட்சி உரிமம் ஏற்கனவே விற்கப்பட்டது.
இந்தப் படத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல பட குழு முடிவு எடுத்துள்ளது. இதனால் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு ப்ரமோஷன் செய்ய ஏலியனையே அழைத்து வர பட குழு முடிவு எடுத்துள்ளது.
அதன்படி இந்த படத்தில் ஏலியனாக வரும் அந்த கதாபாத்திரத்தில் பொம்மையை சுமார் 2 கோடி ரூபாய் செலவில் தயாரித்து இருப்பதாகவும் அது இந்த படத்தில் நடித்திருப்பதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும் அந்தப் படத்தில் பொம்மைக்கு உணர்ச்சி வெளிப்படுத்தும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளும் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பொம்மையை ஐஸ் நிறைந்த பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தி இருப்பதாகவும் படத்தின் ப்ரோமோஷன்க்கு அந்த ஏலியன் பொம்மையை படக்குழுவினர் பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் குழந்தைகளையும் குடும்பங்களையும் திரையரங்குகளுக்கு ஈர்க்க முடியும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கதை மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் கவரும் வகையில் இருந்தால் இந்த படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.