Thursday, September 19, 2024
- Advertisement -
Homeசினிமா“யார் அந்த போனி கபூர்? எனக்கு அவரை தெரியாது! " - இயக்குனர் மிஷ்கினின் சர்ச்சை...

“யார் அந்த போனி கபூர்? எனக்கு அவரை தெரியாது! ” – இயக்குனர் மிஷ்கினின் சர்ச்சை பேச்சு

மூன்று வருடங்களுக்கு முன்பு டைனோசர் திரைப்படத்தின் போஸ்டரை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் எனக்கு போனி கபூர் யார் என்று தெரியாது என கூறியுள்ளார்.

- Advertisement -

அறிமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இவர் இயக்குனர் சுராஜின் முன்னாள் உதவியாளர். அவருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கதை விவாதங்கள் மற்றும் திரைக்கதை எழுதுவதில் பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்களுடன் அவர் இணைந்தார் தயாரிப்பாளர் போனி கபூர் . ‘டைனோசர்ஸ்’ கேங்க்ஸ்டர்களின் உலகில் நடக்கும் க்ரைம்-த்ரில்லர். இதுவரை, பெரும்பாலான தமிழ் திரைப்படத் தலைப்புகள் சிங்கம் போன்ற விலங்குகளின் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளன.

புலி, சிறுத்தை, ஆனால் இங்கு ஒரு திரைப்படத்திற்கு பயங்கரமான ராட்சத உயிரினத்தின் பெயர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. காரணம் என்னவென்று கேட்டபோது, ​​படம் பார்க்கும் போது பார்வையாளர்கள் அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வார்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், ஸ்ரீனி, சாய் பிரியா, யாமினி சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், தமிழ் சினிமாவின் 10 முன்னணி தயாரிப்பாளர்கள் இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அனைத்து நடிகர்களையும் சேர்த்து, படத்தில் 130 கலைஞர்கள் உள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தில் டிரைலர் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது இதில் இயக்குனர் மிஸ்கின் கலந்து கலந்து கொண்டு பேசும்போது ” தயாரிப்பாளருக்கு முதல் திரைப்படம் என்பது தலைப்பிள்ளை போல, ஆனால் இந்த தயாரிப்பாளரை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், அதனால் இந்த தயாரிப்பாளர் சினிமா துறையை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார்” என்று பேச தொடங்கினார்.

- Advertisement -

மேலும் அவர் பேசும்போது ” நான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மற்றும் அஞ்சாதே திரைப்படத்தை இயக்கும்போது ஒரு நாளைக்கு 120 சிகரெட் க்கு மேல் புகைக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அதுதான் எனக்கு வலுவான நம்பிக்கையும் கொடுத்தது.டைனோசர் என்ற திரைப்படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருந்தாலும் எனக்கு இன்னும் அந்த சப்டைட்டில் புரியவில்லை” என்று பேசினார்.

இந்தப் படத்தில் நடிகராக நடிக்கும் உதய் கார்த்திக் தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகையான ஸ்ரீதேவியின் உறவுக்காரர் ஆவார். இந்த ஆடியோ லான்ச்சுக்கு மிஷ்கினை அழைக்கும் போது போனிக் கபூர் பற்றி கூறியுள்ளார். இதற்கு இயக்குனர் மிஷ்கின் எனக்கு போனி கபூர் யார்? என்று தெரியாது. தற்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார், அதற்கு என்ன காரணம் என்பதை மிஷ்கின் தற்போது விளக்கினார்.

இது குறித்து அவர் பேசும் பொழுது “எனக்கு தெரிந்ததெல்லாம் நடிகை ஸ்ரீ தேவி தான். அவர்களுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. போனி கபூர் சார்க்கு என்னுடைய நன்றிகள் ” என்று பேசி இருந்தார் இயக்குனர் மிஷ்கின்.

Most Popular