Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி விஜய்யின் தாய் பாசம்..! எதுக்காக எடுத்த போட்டோ இது தெரியுமா?

தளபதி விஜய்யின் தாய் பாசம்..! எதுக்காக எடுத்த போட்டோ இது தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது உச்சபட்ச நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் விஜய்.லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மே ஒன்றாம் தேதி முதல் லியோ படத்தின் அடுத்த செடியூல் தொடங்குகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது தாயுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருந்தாலும் இளைஞர்கள் இவரை தலைவர் என்று அழைத்தாலும், விஜய் தனது தாய்க்கு எப்போதும் ஒரு மகன்தானே.

- Advertisement -

அதனை வெளிப்படுத்தும் விதமாக தாய் ஷோபா மேலே அமர்ந்திருக்க விஜய் தனது தாய் காலடியில் கீழே அமர்ந்திருக்கிறார். விஜய் தந்தையும் இயக்குனருமான எஸ்வி சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோரின் 50 ஆவது ஆண்டு திருமண நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

இதில் பங்கு பெற்ற விஜய் பெற்றோர்களுடன் ஒரு நாள் முழுவதும் இருந்துள்ளார். நடிகர் விஜய் தன்னுடைய பெற்றோர்களை கவனிக்காமல் தன்னந்தனியே விட்டு விட்டார் என்ற விமர்சனங்கள் அண்மையில் எழுந்தது. ஆனால் இதற்கு விளக்கம் அளித்த எஸ் ஏ சந்திரசேகர் விஜய் தங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வதாகவும், மாதம் மாதம் தங்களுக்கு ஆகும் செலவை விஜய் தான் மேற்கொள்வதாகவும் கூறினார்.

தற்போது அதனை உண்மையாக்கும் வகையில் இந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. எனினும் இந்த புகைப்படத்தில் தாய் ஷோபா மட்டும்தான் இருக்கிறார். இதனால் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஏன் புகைப்படத்தில் இல்லை என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

எதுவாக இருந்தாலும் நமது வீட்டில் நாம் எப்படி பெற்றோர்களிடம் நடந்து கொள்வோமோ அதே போல் விஜய்யும் அவர்களது பெற்றோர்களுடன் நடந்து கொண்டது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொடர்பாக தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வரும் வதந்திகளுக்கு அவர் தரப்பிலிருந்து முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தது உள்ளனர்.

Most Popular