கல்கியின் பெரும்புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை தமிழில் படமாக்குவதே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டவர் இயக்குனர் மணிரத்னம். செப்டம்பர் மாதம் முதல் பாகமும் இன்று அதன் தொடர்ச்சியை வெளியிட்டு பிறவிப்பயனை பெற்றுள்ளார் அவர். இத்திரைப்படத்திற்காக பல நகரங்களில் பல்வேறு புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டது.
முதல் பாகத்தில் டிவிஸ்ட்டுடன் முடிக்கப்பட்ட படத்தை அதே வேகத்தில் இயக்கியுள்ளார் மணிரத்னம். 2ஆம் பாகத்தின் விமர்சனங்கள் முதல் பாகத்தை விட சிறப்பாக அமைத்திருக்கிறது. குறிப்பாக ஆதித்ய கரிகாலன் மற்றும் நந்தியின் படத்தில் நடிப்பால் மிரட்டியுள்ளனர். முதல் பாகத்தைப் போலவே இதுவும் வசூலில் பல சாதனைகள் புரியும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.
பொன்னியின் செல்வனின் பிரச்சினை
துவக்கம் முதலே இத்திரைப்படத்தின் பெரிய பிரச்சினை புத்தகம் படித்தவர்கள் தான். புத்தகத்தில் இருக்கும் பலவற்றை சேர்க்கவில்லை சிலவற்றை மாற்றுகிறார் என மணிரத்னத்தைத் தொடர்ந்து குற்றம் சாட்டியே வந்தனர் அவர்கள். 5 புத்தகங்களில் மொத்தம் 293 அத்தியாயங்கள் கொண்ட ஒரு நாவலை இரண்டு பாகங்களில் அடக்குவது சாமான்ய காரியம் அல்ல.
அண்மையில் நடந்த நேர்க்கானல் ஒன்றில் கூட ஏன் பொன்னியின் செல்வனை வெப் சீரிஸ் போல செய்யவில்லை என்பதற்கு சரியான விளக்கம் கொடுத்திருந்தார் மணிரத்னம். அவர் கூறியதாவது, “ அனைத்து நடிகர்களின் தேதிகளை வாங்குவது எளிதல்ல. மேலும் இதை 2 பாகங்களில் படமாக்கியதே எனக்கு பெரும் திருப்தி தான். ” என்றார்.
முதல் பாகத்தைப் போலவே மீண்டும் இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் தப்புகளை சுட்டிக் காட்டி வருகின்றனர் புத்தகம் வாசித்தவர்கள். ஆனால் இன்னும் மிகப் பெரியது. இரு பாகங்களின் முக்கிய இடமும் க்ளைமாக்ஸ் தான். பொன்னியின் செல்வன் 1இல் ஊமை ராணியின் அறிமுகம் ஓர் டிவிஸ்ட்டாக முடிக்கப்பட்டது.
அதே போல இரண்டாம் பாகத்துடன் படத்தைப் முடிப்பதால் இந்த க்ளைமாக்ஸை அதை விட நுட்பமாக கையாள வேண்டும். அதில் கை வைத்துள்ளார் மணிரத்னம். புத்தகத்தில் வரும் முடிவுக்கும் மணிரத்னம் இயக்கியிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சிக்கும் பெரிய வித்தியாசம் உள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலானோர் 15 நிமிடம் தேவையில்லாத போர்க்காட்சிகள் இடம்பெற்றுள்ளதை நெகட்டிவ்வாக குறிப்பிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மொத்த நாவலின் டுவிஸ்ட்டை வித்தியாசமாக காட்டியுள்ளதாக கூறுகின்றனர். அது என்னவென்று இங்கு குறிப்பிடுவது குற்றம். பெரிய ஸ்பாய்லராக அமைந்துவிடும்.