சினிமாவில் பெரிய விளம்பரங்களை எதிர்பார்க்காமல் தான் உண்டு தன் படம் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர் அஜித்குமார். சினிமாவில் நடித்துக் கொண்டே முன்னது விட குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார் அஜித். வாழா என் வாழ்வை வாழவே எனும் பாடல் வரிகளுக்கு இணைங்க நிஜ வாழ்க்கையில் நாம் இவரைக் காணலாம்.
அஜித்துக்கு எப்போதும் பைக், கார்களின் மீது ஈர்ப்பு அதிகம். சில ரேசிங் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். வினோத்தின் வலிமை மற்றும் துணிவு படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் பைக் பயணத்தை தொடங்கினார். உலகம் சுற்றுதலை தன் வாழ்நாள் கனவாக கொண்ட அஜித்குமார் முதல் கட்டமாக இந்தியா முழுக்க இருக்கும் மாநிலங்களில் பயணித்து முடித்துவிட்டார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்கும் அஜித் இந்த பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். துணிவு படத்தின் வெளியீட்டுக்குப் பின் விக்னேஷ் சிவனின் படம் கைவிடப் பட்டதால் மீண்டும் வெளிநாடு பயணத்தை தொடர்ந்தார். அடுத்த படத்தை துவங்கியுள்ளதால் பணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
‘ ரைட் ஃபார் மியூட்சுவல் ரெஸ்பெக்ட் ’ என்ற ஹஸ்டாக் கொண்ட அஜித்தின் அடுத்தக்கட்ட பயணத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னரே வெளியானது. தற்போது அதைப் பற்றிய விவரமான செய்தி கிடைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் 62 படத்திற்குப் பின் இந்த பயணம் துவங்கவிருக்கிறது. அதில் 16 நாடுகள் அடங்கும்.
இதுவரை வெறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் மட்டுமே வெளியானது. அடுத்து தான் மேற்கொள்ளும் பயணத்தை ஆவணப் படமாக உருவாக்கவுள்ளார் அஜித். பில்லா, வலிமை, துணிவு படங்களை ஒளிப்பதிவு செய்த நிராவ் ஷா இதையும் ஷூட் செய்கிறார். நெட்பிளிக்சில் இந்த ஆவணப்படம் வெளியாகவுள்ளது. 2024ஆம் ஆண்டு இறுதியில் நாம் இதை எதிர்பார்க்கலாம்.