Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினி ஒரு ஜூரோ! அவர் ஒரு ஏமாற்றுக்காரர்.. பொங்கி எழும் ஆந்திர அரசியல்வாதிகள்

ரஜினி ஒரு ஜூரோ! அவர் ஒரு ஏமாற்றுக்காரர்.. பொங்கி எழும் ஆந்திர அரசியல்வாதிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் விஜயவாடாவில் நடைபெற்ற  என் டி ஆர் நூறாவது பிறந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ரஜினிகாந்த் பெருமையாக பாராட்டினார்.

- Advertisement -

மேலும் நடிகர் பாலகிருஷ்ணாவையும் அவர் வாழ்த்தி பேசினார். இது தற்போது ஆந்திராவை ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினரை அதிருப்தி அடைய செய்துள்ளது. எதிர்க்கட்சியை ரஜினி புகழ்ந்து பேசியது ஆளுங்கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். இது குறித்து ஆளுங்கட்சியை சேர்ந்த கோடாலி வெங்கடேஸ்வர ராவ் நாணி என்ற எம் எல் ஏ நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து பேட்டி அளித்துள்ள அவர் என் டி ஆர் முதுகில் குத்தியவர் தான் சந்திரபாபு நாயுடு. அந்த தருணத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உதவிய ஏமாற்றுக்காரர் தான் ரஜினி. எம்எல்ஏக்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதற்கு அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினி உதவியாக இருந்தார்.

- Advertisement -

ரஜினி தமிழ்நாட்டில் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் ஒரு ஜீரோ. ரஜினிகாந்த் வாரத்தில் நான்கு நாட்கள் மருத்துவமனைக்கு செல்வார். எஞ்சியில மூன்று நாட்களில் தான் படப்பிடிப்புக்கு வருவார். இதனால் ரஜினியின் பேச்சை பெரியதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்று கடுமையான விமர்சனங்களை அவர் முன் வைத்திருக்கிறார்.

ரஜினியின் இந்த பேச்சு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளை கோபமடைய செய்துள்ளது. இதனால் ஜெயிலர் படத்திற்கு ஆந்திராவில் ஜெகன் ரெட்டி அரசு குடைச்சல் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நடுநிலை தவறி ஒரு கட்சி சார்பாக நடந்து கொண்டு விட்டார் என பலரும் விமர்சனம் வைத்திருக்கிறார்கள்.

Most Popular