Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசினிமா“அப்போ நான் 9ம் வகுப்பு முடிச்சிருந்தேன் ” - தல அஜித் உடன் ஹீரோயின் ஆக...

“அப்போ நான் 9ம் வகுப்பு முடிச்சிருந்தேன் ” – தல அஜித் உடன் ஹீரோயின் ஆக நடித்தது பற்றி பேசிய சங்கவி !

தமிழ் உலகில் இன்று தலைசிறந்த நடிகர் அஜித் குமார், இவருக்கு அறிமுகம் ஒரு கற்களாக இருந்தாலும் அமராவதி திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகர் கான ஒரு அங்கிகாரத்தை கொடுத்தது. அந்த படத்தில் நடிகையாக நடித்தவர் தற்பொழுது ஒரு ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான அமராவதி திரைப்படத்தில் நடிகையாக நடித்தவர் சங்கவி. சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோவில் அமராவதி திரைப்படத்தில் நடிக்கும் போது தன்னுடைய வயது என்ன என்பதையும் அப்போது அவர் என்ன செய்தார் என்பது பகிர்ந்துள்ளார்.

அமராவதி திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது. அப்பொழுது இந்த திரைப்படத்துக்கு நடிகையாக ஒப்பந்தமானவர் சங்கவி, அவருக்கு அப்போதே வயது 16. படத்தின் கதைக்களமும் இளம் பெண்ணை சுற்றிய இருக்கும் என்பதால் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான நபராக இருப்பார் என்று இவரை ஒப்பந்தம் செய்வதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த படத்தின் போது டப்பிங் டயத்தில் அஜித்குமாருக்கு காயம் ஏற்பட்டு படுத்த படுக்க இருந்ததால் ஒரு சில காட்சிகளில் அவருக்கு பதில் நடிகர் விக்ரம் அவர்கள் டப்பிங் செய்தார். இது படத்தின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தியது.

- Advertisement -

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு அமராவதி திரைப்படம் ரீ ரிலீஸ் பற்றி ஒரு அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நடிகை சங்கவி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் “மே 1ம் தேதி தொழிலாளர் தினம், மே 1ம் தேதி எனக்கு ஸ்பெஷல் ஆணை தினமாகும்.என்னுடைய முதல் திரைப்படமான அமராவதி திரைப்படம் அஜித் குமார் உடன் நடித்திருந்தேன் அந்த படம் மீண்டும் மே ஒன்றாம் தேதி டுடே ரிலீஸ் ஆக உள்ளது.இந்தப் படம் 1992-ல் எடுக்கப்பட்டது, அப்போது நான் 9-ம் வகுப்பு முடித்திருந்தேன் . இயக்குனர் செல்வா சார் என்னை சென்னையில் பார்த்து அந்த வேடத்தில் நடிக்க முடிவு செய்தார்.அப்போது எனக்கு எதுவும் தெரியாது.என்னை நடிக்க வைக்க இயக்குனர் மிகவும் கஷ்டப்பட்டார்” என்று மேலும் கூறினார்.

Most Popular