Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாமாமன்னன் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் என்ன? இவ்வளவு பயங்கரமான முகமா?

மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் என்ன? இவ்வளவு பயங்கரமான முகமா?

நடிகர் வடிவேலுவை நமக்கெல்லாம் நகைச்சுவை நடிகராக தான் தெரியும். வடிவேலு இல்லையென்றால் மீம்ஸ் உலகமே இல்லை. அந்த அளவுக்கு படத்தில் நடிக்கவில்லை என்றாலும் கூட வடிவேலு திரைப்படத் துறையை ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும் வடிவேலு காமெடி சுத்தமாக அந்த படத்தில் எடுபடவில்லை. வடிவேலு ஹீரோவாக நடித்தாலும் அவருக்குள் ஒரு குணச்சித்திர நடிகர் இருப்பதாக கமல் பலமுறை பாராட்டிருக்கிறார்.

- Advertisement -

தேவர் மகன் படத்தில் வடிவேலு அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை தான் நடித்திருப்பார். ஆனால் தமிழ் திரையுலக இயக்குனர்கள் வடிவேலுவை வெறும் காமெடியனாகவே பயன்படுத்திவிட்டு அவருடைய முழு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்காமல் விட்டு விட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் அந்த ரசிகர்களின் ஏக்கத்தை மாரி செல்வராஜ் உடைத்துள்ளார். மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் வடிவேலுவை மிகவும் பயங்கரமான கொடூர கதாபாத்திரத்தை நடிக்க வைத்திருக்கிறார்கள். வடிவேலு ஆணவக் கொலை செய்யும் தந்தையாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

வடிவேலுவை நாம் சிரித்த முகத்திலும் சிரிக்க வைக்கின்ற முகத்தையும் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் முதல் முறையாக ஆணவக் கொலை செய்யும் அளவுக்கு பயங்கரமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். மாமன்னன் படம் ஆணவக் கொலை பற்றி எடுக்கப்படும் படமாக இருக்கலாம் என தெரிகிறது. ஏற்கனவே பரியேறும் பெருமாள் படமும் ஆணவக் கொலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular