Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாஉண்மையிலேயே இவருக்கு பெரிய மனசு தான் - மீண்டும் ஒருமுறை நிரூபித்த நடிகர் விஜய் சேதுபதி

உண்மையிலேயே இவருக்கு பெரிய மனசு தான் – மீண்டும் ஒருமுறை நிரூபித்த நடிகர் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் தனக்கு கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மூலம் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி இன்று மிகப்பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், இவரின் சமீபத்திய செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அனைவரும் பாராட்டி உள்ளார்கள்.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் ஏதேனும் திரைப்படங்களில் சிறு,சிறு வாய்ப்புகள் கிடைத்தாலும்,அதில் சிறப்பாக நடித்து வந்தார். அந்த வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள இன்றைய தமிழ் திரையுலகில் எந்த இயக்குனரும் எந்த தயாரிப்பாளரும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகராக மட்டுமல்லாமல் படத்திற்கு என்ன தேவையோ அதையும் சிறப்பாக செய்து வருகிறார் அந்த நிலையில் இவ்வாறு சமீபத்தில் அனுப்பி வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் இவருக்கான பெயரை மேலும் ஒரு படி உயர்த்தி இருந்தது. மேலும் அவர் மலையாளம் தெலுங்கு ஹிந்தி மொழி திரைப்படங்களிளும் நடித்து வருகிறார்.

- Advertisement -

ரசிகர்களால் மிகவும் யதார்த்தமான மனிதர் என அனைவராலும் நேசிக்கக் கூடிய நடிகர் விஜய் சேதுபதி. மற்ற நடிகர்கள் அவரது ரசிகர்களிடம் அன்பு காட்டினாலும் இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு அன்பு காட்டுவது புதுவித அனுபவமாக இந்த தமிழ் திரை உலகில் இருந்து வருகிறது. அந்த வகையில் தயாரிப்பாளரும் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

விஜய் சேதுபதி குறித்து அவர் கூறும் போது ” நான் தலைவராக இருக்கும் பெப்சி யூனியனில் இருக்கும் 250 பேருக்கு வீடு கட்டுவதற்கு பண பற்றாக்குறை இருப்பதையும் அவரிடம் கூறினேன்.அவர் உடனடியாக, அனைவரது வங்கி கணக்கிலும் தலா 50,000 செலுத்தி இருந்தார்.மேலும் 30 லட்சம் தேவை என்று அவரிடம் கேட்கும் போது உடனடியாக அவர் உதவியாளரிடம் அந்த பணத்தை கொடுத்து அனுப்பி எங்களுக்கு உதவி இருந்தால் நாங்கள் எப்பொழுதும் இந்த உதவியை மறக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் செயல் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றும் பெரும் அமைந்துள்ளது.

தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் விஜய் சேதுபதி பயன்படுத்திக் கொண்டு தனக்கான பெயரை இந்த திரையுலகில் மற்றும் இந்த சமூகத்தில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Most Popular