Wednesday, December 4, 2024
- Advertisement -
Homeசினிமாகஸ்டடி டிரைலர் வெளியானது.. தெறிக்கவிட்டு இருக்கும் வெங்கட் பிரபு.. கண்டிப்பாக ஹிட் தான்

கஸ்டடி டிரைலர் வெளியானது.. தெறிக்கவிட்டு இருக்கும் வெங்கட் பிரபு.. கண்டிப்பாக ஹிட் தான்

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்த கஸ்டடி என்ற திரைப்படத்தின் உடைய ட்ரெய்லர் தற்பொழுது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் நடிகர் சரத்குமார், அரவிந்த்சாமி நடிகை கீர்த்தி செட்டி, ப்ரியாமணி, கயல் ஆனந்தி போன்ற பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இதில் ஒருவர் என்றாலே அந்தப் படத்தின் பாடல்கள் வெற்றி அடைவது நிச்சயம். இதில் இருவரும் சேர்ந்து ஏற்றி இருக்கும் பாடல்கள் எவ்வாறு இருக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ட்ரைலரை யுவன் சங்கர் ராஜாவினுடைய பேக்ரவுண்ட் மியூசிக்  அனல் பறக்க அமைந்திருக்கிறது. இது திரைப்படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு விறுவிறுப்பாகவும் பல டுவிஸ்டுகளை கொண்டதாகவும் தெரிகிறது. இதை அரவிந்த் சாமியை வில்லனாக பார்க்கும் பொழுது திரைப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிறது.

- Advertisement -

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளிவர இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யா காவல் துறை அதிகாரியாகவும் ,இதில் வில்லனாக நடித்திருக்கும் அரவிந்த்சாமி குற்றவாளியாகவும் கதைக்களம் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது.

2021 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஆண்டில் பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் அதுவும் ஒன்று. அதேபோல் இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

இந்த ட்ரெய்லரிலேயே துப்பாக்கி சூடுகளும் சண்டைகளும் என்று அதிரடியாக இருக்கிறது.  இந்த கஸ்டடி திரைப்படம் முற்றிலும் ஒரு ஆக்சன் திரைப்படம் ஆகும்
.நடிகர் நாக சைதன்யாவை பொறுத்தவரை கடைசியாக அவர் நடித்த இரண்டு மூன்று திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை ஆனால் இப்பொழுது இவர் நடித்திருக்கும் என்று கஸ்டடி திரைப்படம் நிச்சயமாக இவருக்கு சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்துக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular